முதல்வர் பஸ்ல போறது உலக மகா அதிசயம் இல்லையே! திமுக ஆட்சினாலே மின்தடை தானே! தஞ்சையில் பொங்கிய ஓபிஎஸ்
தஞ்சாவூர் : திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர் எனவும், முதலமைச்சர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் கூறினர்.
அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ‛ப்ராஜெக்ட் 75ஐ’ திட்டத்தில் பிரான்ஸ் விலகல்
பின்னர் விபத்தில் உயிரிழந்த 11 பேரது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்த இருபத்தி நான்கு நபர்களுக்கு 25 ரூபாயை காசோலையாக வழங்கினார். பின்பு பாதிக்கப்பட்ட தேரினை ஆய்வு செய்த அவர், கட்சி நிர்வாகிகளிடம் அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார்.

ஓ.பன்னீர் செல்வம் நிதியுதவி
+
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக திட்டங்கள் ரத்து
அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

மின் தடை திமுக
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். மொத்தத்தில் இந்த ஆட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. தி.மு.க அரசு இந்த ஓராண்டு ஆட்சியில் பாஸ் மார்க் வாங்கவில்லை பெயிலாகிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டவை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நீண்ட கால, குறுகிய கால சமூக பாதுகாப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது.

உலக மகா அதிசயம்
ஏழை, எளிய கீழ்தட்டு மக்கள் வாழ்வில் உயரும் வகையிலான சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக அரசு அதனை படிப்படியாக குறைத்து, ரத்து செய்து கொண்டிருக்கிறது. நிதி நிலை சீரழிந்து வருகிறது. அதை சீராக்கி கட்டுக்குள் கொண்டு வருவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்து விட்டது. முதலமைச்சர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டும் வரும் என்பது கடந்த கால வரலாறு" என பேசினார்.