தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021ல் அதிமுக தலைமையில்தான் கூட்டணி.. எந்த மாற்றமும் இல்லை.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. அதிரடி!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: 2021 வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சிகள் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறது. இன்னொரு பக்கம் பாஜக, தமிழகத்தில் அடுத்த முறை ஆட்சி அமைக்கும் கட்சி கண்டிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சியாகவே இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதோடு 2021 தேர்தலில் பாஜக தலைமையிலேயே கூட்டணி இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது முதல்வர் பழனிசாமி அதிமுக கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 கொரோனா கொரோனா "புண்ணியத்தால்" 23 அரியர் பாடங்களிலும் ஆல்பாஸ் ஆன "நேரு".. மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்றி!

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில், 2021 வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணிதான். எம்ஜிஆர் இருந்த போதும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருந்தது.ஜெயலலிதா இருந்த போதும் அதிமுக தலைமையிலேயே கூட்டணி இருந்தது.

கூட்டணி எப்படி

கூட்டணி எப்படி

இனியும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போது கூட்டணி குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து பேச இன்னும் 7 மாதங்கள் இருக்கிறது. பொறுமையாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இப்போது அதை பற்றி பேச வேண்டியது தேவையில்லாத கருத்து.திமுக போன்ற மற்ற கட்சிகளும் கூட கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கவில்லை. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது - முதல்வர் பழனிசாமி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

காவிரி எப்படி

காவிரி எப்படி

காவிரி-கோதாவரியை இணைக்க பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக பேசி வருகிறோம். இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்தில் அதிக தண்ணீர் கிடைக்கும். விவசாய மக்கள் பலன் அடைவார்கள். தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெற தமிழக அரசு சார்பாக சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

English summary
AIADMK will lead the alliance in TN for 2021 as like before says CM Edappadi Palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X