• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தஞ்சையில் நடைபெற்ற ஒரு முன்மாதிரி திருமணம்... காணொலி காட்சி மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்

|

தஞ்சை: தமிழகத்தில் முதல்முறையாக காணொலிக் காட்சி மூலம் ஒரு முன்மாதிரி திருமணம் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த பொதுமுடக்கத்தால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதகாலமாக பெரியளவில் நடைபெறவில்லை. ஏற்கனவே திருமணத்திற்கு தேதி குறித்திருந்தவர்கள் கூட கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் திருமண விழாவை நடத்திக்கொள்ளலாம் என எண்ணி ஒத்தி வைத்த நிகழ்வுகளும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

An exemplary marriage held in tanjore today

இந்நிலையில் அசாதாரண சூழலை கூட தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை கொண்டு மிக லாவகமாக கையாண்டு தஞ்சையில் ஒரு முன்மாதிரி திருமணத்தை நடத்தியுள்ளார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியை வளர்மதி தனது மகள் வெண்பாவுக்கு இன்று திருமணம் நடத்துவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தேதி குறித்து அதற்கான அழைப்பிதழ்களை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் எதிர்ப்பார்க்காத வகையில் இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மகளின் திருமணத்தை ஜூம் செயலி மூலம் நடத்துவது என முடிவெடுத்தார்.

An exemplary marriage held in tanjore today

இதற்கு புதுச்சேரியை சேர்ந்த மணமகன் சந்திரபாண்டியன் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால் எளிமையான முறையில் சமூக விலகலை கடைபிடித்து இன்று இனிதே திருமணம் நடைபெற்று முடிந்தது. மணமக்களுடன் இரு குடும்பத்தினர் சார்பில் 5 பேர் மட்டுமே உடன் இருக்க, மற்ற உற்றார் உறவினர்கள் அனைவரும் ஜூம் செயலி மூலம் இணைந்து காணொலி காட்சியில் திருமணத்தை கண்டு மகிழ்ந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்துக் கூறினர்.

An exemplary marriage held in tanjore today

காணொலிக்காட்சி வாயிலாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த நிலையில், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கினார். நெருக்கடியான காலகட்டத்தில் புதுமையான யோசனை மூலம் திருமண விழாவை நடத்தி முடித்த மனமக்கள் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
An exemplary marriage held in tanjore today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more