தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமலிங்கம் படுகொலை.. தஞ்சையில் முழு கடையடைப்பு.. பேரணி நடத்திய இந்து அமைப்பினர் அதிரடி கைது

ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சையில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமலிங்கம் படுகொலை.. பேரணி நடத்திய இந்து அமைப்பினர் அதிரடி கைது-வீடியோ

    கும்பகோணம்: பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேரணி நடத்திய இந்து அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கட்டாய மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கம் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து கடந்த 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. இந்த படுகொலை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம், அமைதி பேரணி நடத்துவதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

    உடன்பாடு ஏற்படவில்லை

    உடன்பாடு ஏற்படவில்லை

    ஆனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் பேரணி நடத்தக்கூடாது என்றும் போலீசார் பாஜகவினரை கேட்டுக் கொண்டனர். ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இன்றைய போராட்டத்தை இந்து அமைப்புகள் உறுதி செய்து அறிவித்தனர்.

    10 ஆயிரம் கடைகள்

    10 ஆயிரம் கடைகள்

    அதன்படி, இன்று திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற முக்கிய இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கும்பகோணம் நகரிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    அமைதி பேரணி

    அமைதி பேரணி

    மறைந்த ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி பேரணியும் நடைபெற்றன. ஆனால் தடையை மீறி கும்பகோணம் மகாமக குளம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர்

    அர்ஜுன் சம்பத்

    அர்ஜுன் சம்பத்

    இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்று கொண்டிருந்தார். ஆனால் அவரையும் போலீசார் வழியிலேயே மடக்கி கைது செய்துவிட்டனர்.

    கருப்பு முருகானந்தம்

    கருப்பு முருகானந்தம்

    இதேபோல பேரணியில் கலந்துகொள்ளச் சென்ற பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் பாதியியே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பினும், கும்பகோணம் முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

    English summary
    Peace Rally condemning Ramalingam's assassination in Tanjore On behalf of the Hindu Munnani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X