தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொண்டர்களுடன் சென்ற பாஜக கருப்பு முருகானந்தம்.. வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம்.. பரபர நடவடிக்கை!

பாஜக கட்சியை சேர்ந்த பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பாஜக கட்சியை சேர்ந்த பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் வெளியிட்டார். இது பெரிய வரவேற்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது தமிழக பாஜக செய்த செயல் ஒன்று பெரிய சர்ச்சையானது.

தமிழக பாஜக கட்சியின் இது தொடர்பாக செய்தி டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக டிவிட் செய்தது.

என்ன டிவிட்

பாஜக கட்சி தனது டிவிட்டில்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பாஜக டிவிட் செய்து இருந்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. வள்ளுவரை பாஜக அவமானப்படுத்திவிட்டது என்று பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதே சமயம் அதிமுக உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள், இதற்கு ஆதரவாக பேசி இருந்தது.

ஊர்வலம் சென்றார்

ஊர்வலம் சென்றார்

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூர் அருகே பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை நோக்கி ஊர்வலம் சென்றார். தனது தொண்டர்களுடன் அவர் பெரிய ஊர்வலம் சென்றார். வள்ளுவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி இந்த ஊர்வலம் நடந்தது.

பால் அபிஷேகம்

பால் அபிஷேகம்

ஊர்வலத்தின் முடிவில் கருப்பு முருகானந்தம் வள்ளுவருக்கு பால் அபிஷேகம் செய்தார். திருவள்ளுவரை வணங்கி கருப்பு முருகானந்தம் அவர் மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
BJP General secretary Karuppu Muruganandam did ablution of Milk to Thiruvalluvar in Thanjavur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X