இந்த பிழைப்பிற்கு....! கோவில் கோவிலாகப் போய்..! வெளுத்து வாங்கிய அண்ணாமலை! அந்த அமைச்சரையா பேசினார்?
தஞ்சாவூர் : தமிழக முதல்வரை புகழ்ந்து பேச வேண்டும் என ஜீயரிடம் தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர் பாபு கேட்டுக் கொண்டதாகவும், இந்த பிழைப்பிற்கு கோவில் கோவிலாக போய் பிச்சை எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியது

பல்லக்கு தூக்கும் நிகழ்வு
ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறினர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திரவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தடை செய்ய கோரிக்கை
அதே நேரத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. அதனை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்துள்ளதாகவும், பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கோட்டாட்சியர் நீக்கினார்.

முதல்வருக்கு நன்றி
முன்னதாக முதல்வரை ஆதீனங்கள் சந்தித்த நிலையில், பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவு அளித்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். தடை நீக்கத்திற்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் மற்றும் ஜீயர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அண்ணாமலை விமர்சனம்
இந்த நிலையில் தமிழக முதல்வரை பேச வேண்டுமென ஜீயர் மற்றும் ஆதினங்கள் இடம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக் கொண்டதாகவும் இந்த பிழைப்பிற்கு கோவில் கோவிலாக போய் பிச்சை எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பேசிய அவர், " இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு படி மேலே போய் விட்டார்.

அமைச்சர் சேகர் பாபு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேசிய ஜியர் ஒருவர் தமிழகத்தில் நன்கு மழை பெய்து வருகிறது தமிழகம் நன்கு இருக்கிறது என பேசுகிறார். அப்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஜீயரிடம் முதல்வரை புகழ்ந்து பேசுங்கள் என கூறுகிறார். இந்தப் பிழைப்புக்கு கோவில் கோவிலாக போய் பிச்சை எடுக்கலாம். கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருந்து வருபவர்களிடம் பிச்சை எடுக்கலாம். ஜீயர் ஒருவரிடம் போய் முதல்வரை புகழ்ந்து பேசுங்கள் என்பதெல்லாம் ஒரு பிழைப்பா ? என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.