தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவி தற்கொலை கட்டாய மதமாற்றம் உண்மை இல்ல, எங்க கட்சிதான் பெருசாக்குது -உண்மையை உடைத்த பாஜக பிரமுகர்

Google Oneindia Tamil News

தஞ்சை : தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை எனவும் பாஜக தலைமை திட்டமிட்டு பிரச்சனை செய்வதாக பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஒருவர் ஆங்கில ஊடகமான மிரர் நவ்விடம் கூறியதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video

    நீதி கிடைக்காது என்பதால்தான் தஞ்சை பள்ளி மாணவி வீடியோவை வெளியிட்டோம்.. அதில் தப்பில்லை: அண்ணாமலை

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிறுபான்மை மத கல்வி நிறுவனம் ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த அறிவுரை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சுநம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

    கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகி துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    கட்டாய மதமாற்றம் என புகார்

    கட்டாய மதமாற்றம் என புகார்

    இந்நிலையில் மாணவி கட்டாய மதமாற்றம் செய்ய கூறியதால் தான் தற்கொலை செய்துகொண்டார் எனவும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாஜகவினர் கூறும் கருத்துக்களை உண்மை இல்லை என தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தாலும், இந்த பிரச்சனை பெரிதாகி வருகிறது.

    புகாரில் உண்மையில்லை

    புகாரில் உண்மையில்லை

    பள்ளி மாணவிக்கு நீதி வேண்டும் எனக்கூறி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தஞ்சை அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சாலை மறியல் போராட்டமும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. தடையை மீறி ஏராளமான பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளி மாணவி விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியிருந்தார்.

    பாஜக பெரிதாக்குகிறது

    பாஜக பெரிதாக்குகிறது

    இந்த நிலையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் என பாஜக கூறி வருவதில் உண்மையில்லை என தஞ்சை பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஒருவர் கூறியதாக பிரபல ஆங்கில ஊடகமான மிரர் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் பள்ளி மாணவி விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறும் என்று கூட பாஜக போராட்டம் செய்து வரும் நிலையில் தஞ்சை பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஒருவர் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக தங்கள் கட்சியினர் கூறி வரும் அதில் உண்மை இல்லை எனவும் தங்களிடம் ஆலோசிக்காமல் மாநில தலைமை இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து இருப்பதாக கூறியதாகவும் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சிறுபான்மை பிரிவு தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

    சிறுபான்மை பிரிவு தலைவர்

    சிறுபான்மை பிரிவு தலைவர்

    தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் மாணவி தற்கொலை செய்து கொண்டவுடன் பள்ளி மாணவர்கள் விடுதி மாணவர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த நபர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதாகவும் அதில் கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறிய அவர் மாநில பாஜக தலைமை தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி வருவதாகவும் இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என அவர் தெரிவித்ததாக அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    English summary
    There was no forced conversion in the case of the suicide of a school student in Thanjavur and The BJP leadership is planning and causing trouble The BJP's minority leader told an English media outlet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X