தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைஞாயிறுக்கு வந்த காவிரிக்கு மலர்தூவி வரவேற்பு - 8 ஆண்டுகளுக்குப் பின் குறுவை சாகுபடி

கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் தலைஞாயிறு கடைமடைப்பகுதிக்கு வந்ததை விவசாயிகள் மகிழ்ச்சியோடு மலர்களை தூவியும் நெல்மணிகளை தூவியும் வரவேற்றனர். 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று விவசாய

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: காவிரி நீர் கடைமடைப்பகுதியான தலைஞாயிறுக்கு வந்தடைந்தது. அரிச்சந்திரா நதியில் வந்த காவிரியை அமைச்சர் ஓ.எஸ் மணியன், கூடியிருந்த விவசாயிகளும் மலர்களைத்தூவியும் நெல்மணிகளை தூவியும் வரவேற்றனர். கடைமடை பகுதிகளில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 23 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதற்காக 152 ஏரி, கண்மாய்களில் நீர் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

Cauvery enter Kadaimadai Thalaignayiru farmers welcome river Cauvery enter Kadaimadai Thalaignayiru farmers welcome river

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 16ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த கடைமடை பகுதி விவசாயிகளுக்கு கடந்த வாரம் மேற்பனைக்காடு நீர்த்தேக்க நிலையை காவிரி வந்தடைந்தது. காவிரி நீர் வந்ததையடுத்து உற்சாகமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் நெல்மணிகள், நவதானியங்கள், பூக்கள் தூவி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலைஞாயிறு கடைமடைப்பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்தது. அரிச்சந்திரா நதியில் வந்த காவிரியை அமைச்சர் ஓ.எஸ் மணியன், கூடியிருந்த விவசாயிகளும் மலர்களைத்தூவியும் நெல்மணிகளை தூவியும் வரவேற்றனர். கடைமடை பகுதிகளில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

காவிரிக்காக கடைமடைப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு வெள்ளம் போன போதும் கடைமடைக்கு வரவில்லையே என்று வருத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 306 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கு நீர்மட்டம் காணப்படவே ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தியாவில் மிகஅதிக உச்சம்- ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா- 465 பேர் மரணம்இந்தியாவில் மிகஅதிக உச்சம்- ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா- 465 பேர் மரணம்

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி நீர் பயணித்து கடைமடை பகுதியை எட்டியுள்ளது. காவிரி நீர் வந்து சேர்ந்ததால் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள தாங்கள் பலனடையவுள்ளதாகவும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 23 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் காலத்தோடு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Recommended Video

    கடைமடைக்கு வந்த காவிரி.. அறந்தாங்கி அருகே விவசாயிகள் நெல்மணி, நவதானியங்கள் தூவி வரவேற்பு

    English summary
    Welcoming the Kadaimadi Thalaignayiru farmers offered prayers to the Cauvery river. They showered paddy seeds and flowers to welcome water. Cauvery water released from Mettur dam on June 12.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X