தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Fake vote cast in Kanniyakumari: நெல்லை, குமரியில் அடுத்தடுத்து பதிவான கள்ள ஓட்டு!- வீடியோ

    தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மூதாட்டியின் ஓட்டை, யாரோ போட்டுவதால் புலம்பி தவித்த அவர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேரம், செல்ல, செல்ல பல இடங்களில் மதியத்திற்கு பிறகு, கள்ள ஓட்டு புகார்கள் வர தொடங்கி உள்ளன.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் பொட்டு என்கிற மூதாட்டி இன்று வாக்கு அளிக்க வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது ஓட்டை ஏற்கனவே மற்றோருவர் செலுத்தி விட்டதால், வாக்களிக்க முடியாது என்றும், மூதாட்டியை வீட்டுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Continuously counterfeiting vote in Tanjore

    அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஏன், என்னால் வாக்களிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினர். மேலும், கோபமடந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடி மையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுப்பாட்டார். பின்னர், அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

    முதல் கள்ள ஓட்டு கன்னியாகுமரியில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை வேறொருவர் கள்ள வாக்காக செலுத்தியிருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்! வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்!

    இதற்கிடையே, கன்னியாகுமரி தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 1,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தேர்தல் அலுவலர்களுடன் மீனவர்கள் வாக்குவாதம் செய்யதனர். காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கள்ள ஓட்டுகள் விழத்தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

    English summary
    Lok sabha elections 2019: Continuously counterfeiting vote in Tanjore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X