தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிர்ச்சி தந்த காண்டாக்ட் டிரேசிங்.. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தஞ்சையில் என்ன நடந்தது?

தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கியது ரேபிட் பரிசோதனை

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக கொரோனா தொற்று குறைவாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 283 பேர் குணமடைந்து உள்ளனர்.

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. அமெரிக்கா விசாரிக்கிறது: ட்ரம்ப் சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. அமெரிக்கா விசாரிக்கிறது: ட்ரம்ப்

    தஞ்சாவூர் கொரோனா

    தஞ்சாவூர் கொரோனா

    தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று முதல் நாள் வரை 18 பேருக்கு கொரோனா இருந்தது. நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் அங்கு 35 பேருக்கு கொரோனா மொத்தமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் நேற்று தமிழகத்தில் திடீர் என்று கொரோனா அதிகரிக்க காரணம் ஆகும்.

    யார்? எங்கே?

    யார்? எங்கே?

    தஞ்சாவூரில் முதலில் கொரோனா ஏற்பட்ட 18 பேரில் 9 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இவர்களில் சிலர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர். இவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் மூலம் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக சுதாரித்த மாவட்ட நிர்வாகம் இவர்கள் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தனிமைப்படுத்தியது.

    துரிதமான காண்டாக்ட் டிரேசிங்

    துரிதமான காண்டாக்ட் டிரேசிங்

    இவர்கள் தொடர்பு கொண்ட நபர்களை வரிசையாக மாவட்ட ஆட்சியர் அமைத்த குழு தீவிரமாக தேடி காண்டாக்ட் டிரேசிங் மூலம் கண்டுபிடித்தது. அதன்படி கும்பகோணம், அதிரமப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இந்த 250 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை வீட்டில் வைத்து கண்காணிப்பது சிரமம் என்பதால் உடனடியாக இரண்டு தனி தனி இடங்களில் வைத்து சோதனை செய்தனர்.

    இரண்டு இடங்கள்

    இரண்டு இடங்கள்

    இவர்களை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மற்றும் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் வைத்து சோதனை செய்தனர். அதில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் இருந்த 200 பேருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. இவர்கள் எல்லோரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதியானது. இவர்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

    ஒரே நாளில் 17 பேர்

    ஒரே நாளில் 17 பேர்

    ஆனால் திடீர் என்று செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் இருந்த 17 பேருக்கு இரண்டு நாட்களுக்கு முன் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து நேற்று முதல் நாள் இவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. நேற்று இரவு வந்த சோதனை முடிவில், இவர்கள் எல்லோருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு நேரடியாக கொரோனா வந்துள்ளது. 6 பேருக்கு கொரோனா உள்ளவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் கொரோனா பரவி உள்ளது.

    ஒரே நாளில் அதிர்ச்சி

    ஒரே நாளில் அதிர்ச்சி

    இவர்கள் எல்லோரும் காண்டாக்ட் டிரேசிங் முறை மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் தஞ்சாவூரில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பரவ காரணம் ஆகும். அதிராம்பட்டினம் பகுதியில் 7 பேருக்கும், கும்பகோணம் பகுதியில் 4 பேருக்கும், பாபநாசம் பகுதியில் ஒருவருக்கு, தஞ்சாவூர் பகுதியில் 3 பேருக்கும், திருவையாறு பகுதியில் 2 பேருக்கும் கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பரவியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Coronavirus: 17 cases in a single day, What happened in Thanjavur yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X