தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்

120 கிமீ சைக்கிளில் அழைத்து சென்று சிகிச்சை தந்தும் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

தஞ்சை: இடுப்பில் வெறும் வேட்டிதான்.. காலில் செருப்புகூட இல்லை.. புற்றுநோய் பாதித்த மனைவி மஞ்சுளாவை காப்பாற்றுவதற்காக கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி வரை, அவரை உட்கார வைத்து.. சைக்கிளில் கால் வலிக்க சிகிச்சைக்காக அழைத்து வந்தார் கணவர் அறிவழகன்.. ஆனால் எவ்வளவோ பாடுபட்டும் மஞ்சுளாவை காப்பாற்ற முடியவில்லை.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்... இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் மஞ்சுளா. திடீரென மஞ்சுளாவை புற்றுநோய் தாக்கியது.

அதனால், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடிவு செய்தார் அறிவழகன்.. தன் வீடு இருப்பதோ கும்பகோணத்தில்.. ஆஸ்பத்திரியோ புதுச்சேரியில்.. கிட்டத்தட்ட 120 கிமீ தூரம் உள்ளது.

மயிலுடன் பிரதமர் மோடி...அரசியலானது பீகாரில்...போர்கொடி உயர்த்தியது லாலு கட்சி!!மயிலுடன் பிரதமர் மோடி...அரசியலானது பீகாரில்...போர்கொடி உயர்த்தியது லாலு கட்சி!!

 சிகிச்சை

சிகிச்சை

பஸ் எதுவும் இப்போது இல்லை.. இ-பாஸ் வாங்கி கார் எடுத்து கொண்டு போகவும் இந்த ஏழை அறிவழகனால் முடியாது.. அதேசமயம் மனைவிக்கும் சிகிச்சை தந்தாக வேண்டும். எனவே, கும்பகோணத்திலிருந்து மஞ்சுளாவை சைக்கிளில் உட்கார வைத்து, ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

சைக்கிள்

சைக்கிள்

2 பேரும் சைக்கிளில் செல்லும் இந்த போட்டோ வைரலானது.. அதில் அறிவழகன் சட்டை எதுவும் போடவில்லை.. காலில் செருப்பும் காணோம்.. இடுப்பில் வேட்டியை மட்டும் கட்டியிருந்தார்.. கழுத்தில் ஒரு டவல் போட்டிருந்தார்.. அதேபோல, மஞ்சுளா சைக்கிளின் பின்னாடி உட்கார்ந்திருந்தார்.. 2 பேரின் முகத்திலும் ஒரு சோகம் இருந்தது. ஆனால், மஞ்சுளாவின் உயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பும், முயற்சியும் அறிவழகன் முகத்தில் சேர்ந்து தென்பட்டது.

 போலீசார் உதவி

போலீசார் உதவி

முன்னதாக, சைக்கிளில் இவர்கள் சென்றதை பார்த்து போலீசார் விரட்ட ஆரம்பித்துள்ளனர்.. அப்போது போலீசாரை பார்த்ததும், அறிவழகன் வேகமாக சைக்கிள் ஓட்டினாராம்.. இறுதியில் விரட்டி பிடித்துள்ளனர்.. அப்போதுதான் விஷயத்தை சொல்லி உள்ளார்.. நைட் முழுக்க தூங்காமலேயே சைக்கிள் ஓட்டி வந்திருக்கிறார்.. இதை கேட்டதும் போலீசாருக்கு பரிதாப உணர்வு ஏற்பட்டது.. உடனே அவருக்கு டீ வாங்கி தந்துள்ளனர்.. இனிமேல் இப்படியெல்லாம் வரக்கூடாது என்று அறிவுறுத்தியும் உள்ளனர்.. ஏதாவது வண்டி உதவி தேவைப்பட்டால், இந்த நம்பருக்கு போன் செய்யுமாறு ஒரு நம்பரையும தந்து உதவி உள்ளனர்.

 சிகிச்சை

சிகிச்சை

பிறகு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு 2 பேரும் சைக்கிளில் வந்து இறங்கினர்.. நடந்ததை டாக்டர்களிடம் சொன்னதுமே அவர்களுக்கு மனம் இறங்கி உதவி செய்ய முன்வந்தனர்.. உடனடியாக மஞ்சுளாவை வார்டில் சேர்த்து, ஹீமோ தெரபியும் தொடங்கப்பட்டது. இப்படியே 3 நாட்கள் சிகிச்சை நடந்து முடிந்தது.. பிறகு ஆம்புலன்ஸில் இருவரையும் கும்பகோணத்தில் அவர்களது வீட்டில் பத்திரமாக இறக்கிவிட ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

 அறிவழகன்

அறிவழகன்

மேலும் இந்த சசிகிச்சைக்காகவும், ஆம்புலன்ஸுக்காகவும் ஜிப்மர் ஆஸ்பத்திரி பணம் எதையும் வாங்கவில்லை. இதனிடையே, சைக்கிளில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த அறிவழகனை பல தரப்பினரும் பாராட்டினர்.. தன்னார்வலர்கள் மருத்துவ உதவி செய்ய தொடங்கினர்.. ஆனால், மஞ்சுளா இறந்துவிட்டார்.. கடந்த 9 மாசமாக புற்று நோயால் அதிகமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. சிகிச்சை அளித்தும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

"அவ தான் எல்லாமே"

எப்படியாவது மனைவியை காப்பாற்றிவிட வேண்டும் என்று அறிவழகன் எடுத்து கொண்ட அனைத்து முயற்சியுமே நொறுங்கி விட்டன... "என் மனைவி தான் எனக்கு எல்லாமே.. அவள் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை" என்று சொல்லி கொண்டே இருந்த அறிவழகன், இப்போது மஞ்சுளாவை நினைத்து அழுதபடியே இருக்கிறார்!

English summary
death of a cancer patient who was treated by her husband on a bicycle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X