India
 • search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூஜை நம்பிக்கையில்ல! ஆனால் ஏன் கலந்துக்குறேன்னு தெரியுமா? ‘அவங்களுக்கு’ வயிறு எரியனும்! கலகல உதயநிதி

Google Oneindia Tamil News

கும்பகோணம் : பூஜைகள் அடிக்கல்நாட்டு விழா நடத்தப்படும் யாகம் உள்ளிட்ட சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வது ஏன் என்பதற்கான விளக்கத்தை உதயநிதி கொடுத்துள்ள நிலையில் அதனை திமுக ஐடியில் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

  பூஜை நம்பிக்கையில்ல! ஆனால் ஏன் கலந்துக்குறேன்னு தெரியுமா? Udhayanidhi Stalin கொடுத்த விளக்கம் *Politics

  கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் அரசு போக்குவரத்து கழகம் எதிரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழாவும், இளைஞரணி சார்பில் மூர்த்தி கலையரங்கத்தில் 320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!

  இந்த நிகழ்ச்சிகளில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  உதயநிதி ஸ்டாலின்

  உதயநிதி ஸ்டாலின்

  பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி," கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. இதைப் பார்த்து மதவாத சக்திகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன்.

  மதுரை எய்ம்ஸ்

  மதுரை எய்ம்ஸ்

  எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை. திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் அதற்கு முன்பே மூத்த உறுப்பினர்களுக்கு ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை" என பேசினார்.

  கிண்டல் செய்த உதயநிதி

  கிண்டல் செய்த உதயநிதி

  கடந்த ஆண்டு சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கு கட்டுமானப்பணிகள் இன்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் உதயநதி ஸ்டாலின் செருப்பு அணிந்து பூமி பூஜையில் கலந்துகொண்ட நிகழ்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

  உடன்பிறப்புகள் உற்சாகம்

  உடன்பிறப்புகள் உற்சாகம்

  குறிப்பாக ராம ரவிக்குமார்,"ராம ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் காலில் செருப்பு அணிந்து கொண்டு மரியாதை செலுத்துவார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்? தேர்தலுக்கு முன்பு நாத்திக வேடம் ஆட்சிக்கு வந்தபின் நாத்திக ஆத்திக வேடம்!? வாழ்க பகுத்தறிவு?? ஹிந்து மத அவமதிப்பு மன்னிப்பு கேட்கணும்! என பதிவிட்டார். இதேபோல் பாஜகவைச் சேர்ந்த திருப்பதி நாராயணனும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை வைத்தே உதயநிதி ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

  English summary
  Although he does not believe in rituals including the yajna which is the foundation of the pujas, Udhayanithi stalin has given an explanation as to why he attends such events and the DMK ID executives are spreading it fast on social media.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X