நானே அதிமுகவுக்கு ஓட்டு போடுவேன்..! ஓப்பனாக பேசிய திமுக ஆ.ராஜா! ஆனா ஒரு கண்டிசன்! என்ன தெரியுமா..!
தஞ்சாவூர் : திமுக ஆட்சிக் காலம் நிறைவடைவதற்குள் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுமெனவும், இல்லையேல் நானே அதிமுகவுக்கு ஓட்டு போடுகிறேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொதுத் தேர்தலின்போது, திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மகளிருக்கு உரிமை தொகை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தேர்தலுக்காக போலியாக விண்ணப்பங்களை அச்சடித்து திமுகவின் விநியோகம் செய்து வருவதாக அதிமுக கூறியது.

மாதம் ரூ.1,000
நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் குடும்பத் தலைவிகளுக்காக உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அறிவிப்பும் வெளியிடப்படும் யூகங்கள் வெளியான நிலையில், அப்போதும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மக்கள் திமுகவை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.

ஆ.ராசா பேச்சு
இந்த நிலையில் திமுக ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் இல்லையேல் நானே அதிமுகவுக்கு ஓட்டு போடுவேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், நீட் தேர்வு ரத்து ஆயிரம் ரூபாய் மகளை உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி புகார் கூறி வருகிறார்.

அதிமுகவுக்கு ஓட்டு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நாங்கள் சொன்னோம். ஐந்து ஆண்டுகள் முடியும்போது திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் படியுங்கள். அப்போது அந்தத் திட்டங்களின் ஏதாவது ஒன்றை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் நீங்கள் கேள்வி கேட்கலாம். 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழர்களே தமிழர்களே இது திமுகவின் தேர்தல் அறிக்கை ஆயிரம் ரூபாய் தருகிறேன் என கூறி ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார் இதுவரை தரவில்லை எனவே இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டால் நானே அதிமுகவுக்கு ஓட்டு போடுகிறேன். ஒரு வருடம் தான் ஆகி இருக்கிறது வெள்ளம் வரும் காலங்களில் மக்களை காப்பாற்றியிருக்கிறது திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என கூறுவது என்ன வகையானது" எனக் கூறியுள்ளார்.