தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு செய்தி வந்திருக்கு... எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்... ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin Speech: தஞ்சாவூர் திமுக பிரச்சார கூட்டம்- வீடியோ

    தஞ்சை: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமல்ல... எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.

    தஞ்சையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திலகர் திடலில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

    லோக்சபா வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஸ்டாலின் அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    தமிழச்சி தங்கபாண்டியன் அழகோ அழகு.. அவருக்கு வாக்களியுங்கள்.. அட உதயநிதி பிரச்சாரத்தை பாருங்க! தமிழச்சி தங்கபாண்டியன் அழகோ அழகு.. அவருக்கு வாக்களியுங்கள்.. அட உதயநிதி பிரச்சாரத்தை பாருங்க!

    வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்

    வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்

    அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேர்தல் இது. ஆனால் 18 தொகுதிகளுக்கான தேர்தல் இடையிலே வந்தது. இந்த தொகுதிகளிலே அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. அதற்கு என்ன காரணம்.

    18 பேரும் ஆதரவு

    18 பேரும் ஆதரவு


    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக இருந்ததால் அவர்கள் பதவியை இழந்துள்ளார். அந்த 18 பேரும் ஜெயலலிதா இருந்த அவருக்கும், அதிமுகவுக்கும் ஆதரவாக இருந்தவர்கள்.

    [குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]

    நினைக்க வேண்டாம்

    நினைக்க வேண்டாம்

    அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். ஆட்சி இருக்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்.

    தேர்தல் நிச்சயமாக வரும்

    தேர்தல் நிச்சயமாக வரும்

    ஆனால்... ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கின்றனர். மொத்தம் 18 தொகுதிகளுக்கு மட்டுமல்ல... எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும்.

    ஆட்சி முடியும்

    ஆட்சி முடியும்

    அதற்கான செய்தி எனக்கு வந்திருக்கிறது. தேர்தலின் முடிவில்... விரைவில் தமிழகத்தில் இருக்கும் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கஜா புயல் பாதிப்பு

    கஜா புயல் பாதிப்பு

    கஜா புயலின் போது 5 நாட்கள் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். கேட்டால்... சேலத்தில் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறுகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டரில் வந்து சென்றார்.

    அறிக்கை இல்லை

    அறிக்கை இல்லை

    அவர் மட்டுமே... பிரதமர் மோடி ஒரு அறிக்கை விடவில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் இளிச்சவாயர்களா? ஏமானந்த் சோனகிரியா? ஆனால் மோடி இப்போது ஏழையின் மகன் என்கிறார். ஆனா.. விதவிதமாக ஆடைகள் அணிகிறார். வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்று பேசினார்.

    English summary
    Dmk president stalin in tanjore said that dmk will win in lok sabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X