India
  • search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அமாவாசை".. எடப்பாடி பழனிசாமிக்கு "முடக்குவாதம்".. ஜன்னி வேற.. போட்டு தாக்கிய கி.வீரமணி

Google Oneindia Tamil News

தஞ்சை: ஆட்சியை முடக்குவோம் முடக்குவோம் என்று இவர் ஏன் முடக்குவாதம் வந்தது போல பேசி கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் .

கடந்த சில மாத காலமாகவே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய விஷயத்தை பரப்பி வருகிறார்.

இந்த ஆட்சியை விரைவில் முடக்குவோம் என்பதே அவரது சமீபத்திய முழக்கமாக உள்ளது.. இதை தன்னுடைய அனைத்து பிரச்சாரங்களிலும் மறக்காமல் பதிவு செய்து வருகிறார்.

தொடரும் பெரியார் சிலை அவமதிப்புகளுக்கு முடிவு கட்டுங்க.. குற்றவாளிகளை தண்டிக்கனும்..கி. வீரமணி தொடரும் பெரியார் சிலை அவமதிப்புகளுக்கு முடிவு கட்டுங்க.. குற்றவாளிகளை தண்டிக்கனும்..கி. வீரமணி

 அமாவாசை அரசியல்

அமாவாசை அரசியல்

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்க அந்த மாநிலத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கம் நிலை விரைவில் ஏற்படும் என்கிறார்.. குறிப்பாக, தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது...இன்னும் இருபத்தி ஏழு அமாவாசைதான் திமுக ஆட்சியில் இருக்கும்" என்று ஆரூடம் சொல்லி வருகிறார்.

அமாவாசை

அமாவாசை

எடப்பாடி பழனிசாமியின் கூற்றுஎந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.. இது சோஷியல் மீடியாவில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறாத நிலையில், மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை நகராட்சிக்கு பெற ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரிப்போம் என்ற மனநிலையிலே மக்கள் உள்ளனர்.. எனவே திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்கும் என்கிறார்கள் ஒருசாரார்..

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஆளுங்கட்சி அதிக இடங்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் பேசுகிறார், அதேபோல, எதிர்க்கட்சி நாங்கள் தான் என மக்களை நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பேசுகிறார், ஆக மொத்தம் இந்த பேச்சுகள் மக்களை ஈர்க்காது.. கடைசி நேர கவனிப்பே வெற்றியை தீர்மானிக்கும் என்கிறார்கள் வேறு தரப்பினர். இப்படிப்பட்ட சூழலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எடப்பாடி குறித்த பேச்சுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

 வீரமணி பேட்டி

வீரமணி பேட்டி

தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக கலைந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு "முடக்குவாதம் வரக்கூடாது".. அதிலும் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு முடக்குவாதம் வரவே கூடாது.. அதிலும் எதிர்க்கட்சி தலைவருக்கு முடக்குவாதம் வரக்கூடாது..

முடக்குவாதம்

முடக்குவாதம்

இவர் ஏன் முடக்குவாதம் வந்ததுபோல பேசிக் கொண்டிருக்கிறார்.. காரணம் தனிப்பட்ட முறையில் இல்லை.. ஜனநாயகத்தை முடக்குவோம் என்று சொல்ல எடப்பாடிக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது..
தோல்வியை நிச்சயம் உணர்ந்துவிட்டார்கள்.. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவோம் என எஜமானி விசுவாசத்தால் அமாவாசை பெயரால் கற்பனையை வளர்த்துக் கொண்டால், திமுகவுக்கு ஒன்றும் பாதிப்பு வராது.. ஆனால், அதிமுக காணாமல் போவது உறுதி..

சாதனை

சாதனை

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலையில், 8 மாத திமுக ஆட்சி சாதனையே முழுமையான வெற்றியை பெற்று தரும்... அதனால்தான், எதிர்கட்சி தலைவர் எஜமானிய விசுவாசத்தால் அமாவாசை பெயரால் அரசை முடக்குவோம் என முடக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் திமுக இன்னும் கூடுதல் வெற்றியை பெறும்.. தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஜன்னி வந்ததுபோல் பேசி கொண்டிருக்கிறார்" என்றார்.

English summary
Edapadi Palanisamy says about One country only one election and DK Veeramani slams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X