தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயிர்க்கடன் உடனே வழங்குக! கரும்பு ஆதார விலையை உயர்த்துக! தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

Google Oneindia Tamil News

தஞ்சை: கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்குவதில் மெத்தனம் காட்டுவதாகக் கூறி தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

Recommended Video

    பயிர்க்கடன் உடனே வழங்குக! கரும்பு ஆதார விலையை உயர்த்துக! தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

    தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம்

    கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தித் தருமாறும் வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்சியர் தலைமையில் கூட்டம்

    ஆட்சியர் தலைமையில் கூட்டம்

    தஞ்சையில் சம்பா சாகுபடி பயிர் செய்வதற்காக கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விவசாயிகளின் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து வங்கிகள் கடன் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தலைமைத் தாங்கிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    முக்காடு அணிந்து போராட்டம்

    முக்காடு அணிந்து போராட்டம்

    இதற்கிடையே ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தினர் திடீரென தரையில் அமர்ந்து முக்காடு போட்டு முழக்கங்கள் எழுப்பினர். சம்பா சாகுபடி பயிர் செய்திட கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் இதுநாள் வரை அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    விவசாயிகள் வெளிநடப்பு

    விவசாயிகள் வெளிநடப்பு

    அதே சமயம் 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை எனவும் கூறி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதை அடுத்து கூட்டுறவு சங்கங்களை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதுமட்டுமின்றி, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். உரம் சாக்குகளை உடலில் உடை போல் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல், கரும்புக்கு விலை நிர்ணயம் வேண்டும்

    நெல், கரும்புக்கு விலை நிர்ணயம் வேண்டும்

    இவர்களும் மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தியது மட்டும் அல்லாமல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆதார விலையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதேபோல் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து தேசிய வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    English summary
    Farmers in Tanjore protested against the cooperative banks' reluctance to provide crop loans and to demand compensation for farmers who had crop insurance for 2020-21. Farmers wearing headscarves took part in a protest meeting at the Tanjore District Collector's Office. They also walked out demanding higher support prices for paddy and sugarcane.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X