தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜாவால் கரும்பு தோட்டம் பாழாய்போனது.. தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

கஜா புயல் சேதம் காரணமாக தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கஜா புயல் சேதம் காரணமாக தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.

கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகம் முழுக்க 39 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே புயல் சேதம் காரணமாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 Gaja Storm Loss: A farmer in Thanjavur commits suicide

[டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! ]

இரண்டு வாரம் முன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கஜா புயல் சேதத்தால் தற்கொலை செய்து கொண்டார். சென்ற வாரம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் திருவாரூரில் பெண் ஒருவர் முகாமில் சுகாதாரமில்லாத உணவு சாப்பிட்டு பலியானார். இந்த நிலையில் தற்போது தஞ்சையை சேர்ந்த விவசாயி சாமிகண்ணு தற்கொலை செய்துகொண்டார்.

சோழகிரிபட்டியை சேர்ந்த சாமிகண்ணு 2 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து இருக்கிறார். கஜா புயலில் கரும்பு மொத்தமும் நாசமானதால் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இத்தனை வருட உழைப்பு வீணானதில் அவர் மனமுடைந்து போய் உள்ளார்.

இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர் இன்று மதியம் விஷம் அருந்தினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி சாமிகண்ணு பலினார்.

இது தஞ்சாவூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் நடக்கும் மூன்றாவது தற்கொலை ஆகும் இது.

English summary
Gaja Storm Loss: A farmer in Thanjavur commits suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X