• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கணவன் மனைவி செய்யுற காரியமா இது.. . ஷாக்கான கலெக்டர்.. ரீட்டாவின் சேட்டையால் மிரண்டு போன தஞ்சை

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடைகளில் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். சதுரங்கவேட்டை திரைப்படம் பார்த்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக கணவனும் மனைவியும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை நிறுவனங்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர்களிடம் ஒரு சில அரசு திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் மேற்படி திட்டத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு கூறி வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி உள்ளார்.

பல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்பல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் துணி கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு கொண்டு சென்றனர் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

விசாரணை

விசாரணை

இதன்பேரில் பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கினார்கள். முதற்கட்ட விசாரணையில் கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா என்பவரின் வங்கி கணக்கு என்பது தெரியவந்தது.

பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

இதனை அடுத்து வங்கி கணக்கை முடக்கிய காவல்துறையினர், தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் கோயம்புத்தூர் சென்று ரெஜினாவை பிடித்து விசாரணை செய்தனர். ரெஜினா அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும் மோசடி கும்பல் இவரை பகடைக்காயாக பயன்படுத்தியது தெரியவந்தது .

கணவன் மனைவி

கணவன் மனைவி

அப்பெண்ணிடம் நடத்திய தொடர் விசாரணையில் ரெஜினாவிற்கு ஆசைக்காட்டி அவரது வங்கி கணக்கை வாங்கி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தானபாரதி (65) அவரது மனைவி ரீட்டா பபியா (50) தம்பதி மோசடி செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவர்களை கைது செய்து அழைத்து வந்த சைபர் கிரைம் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது . பல கலெக்டர்களின் பெயரை சொல்லி அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. ரீட்டா பபியா, சந்தானபாரதியை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இருவரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு பல்வேறு மோசடி செயலை செய்யத் தொடங்கி உள்ளார்கள்.

ஏமாற்றுவோம்

ஏமாற்றுவோம்

கைதா ரீட்டா இதுபற்றி கூறுகையில் எனது கணவருடன் சேர்ந்து சதுரங்கவேட்டை திரைப்படம் பார்த்து மோசடியில் ஈடுபட திட்டமிட்டேன் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர்களை அணுகி திரைப்படம் எடுப்பதாகவும் நீங்கள் மேக்அப் போடணும் என்று கூறுவேன். உங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வங்கி கணக்கு எண்ணை வாங்குவேன். இதேபோல் என் கணவர் அங்குள்ள குடிகாரர்களுடன் பழகி அவர்களுக்கு இலவசமாக மது வாங்கி கொடுத்து ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி கொள்வார்.

ஏமாற்றுவோம்

ஏமாற்றுவோம்

இறுதியில் ஆதார் கார்டு மூலம் சிம் வாங்கி, பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணின் வங்கி கணக்கு எண்ணை நாங்கள் மோசடி செய்ய திட்டமிடும் நபர்களிடம் கொடுத்து பணம் செலுத்த சொல்வோம். பணம் செலுத்தப்பட்டது தெரியவந்ததும். பின்னர் ப்யூட்டி பார்லர் உரிமையாளரிடம் கூடுதலாக பணம் செலுத்தி விட்டோம் எனக் கூறி அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தை ஆட்டையைப் போட்டு சென்று மோசடி செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Police have arrested a husband and wife who tried to extort money from popular hospitals and clothing stores using the name of the Tanjore District Collector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X