தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு- வீடியோ

    தஞ்சை: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

    இதற்காக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்பு சட்டம் இயற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தினர், ஒருபக்கம் பார்த்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம். அந்த திட்டத்திற்கு தேவையான நிலங்களை தர மாட்டோம் என சொல்கின்றனர்.

    Hydrocarbon issue .. This is the double role of the Government of Tamil Nadu ..said by farmers

    அதே சமயம் நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் பிரதான் பேசுகையில், ஏற்கனவே இரு திட்டங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாகவும், மேலும் புதிய 4 திட்டங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மத்திய அமைச்சரின் தகவல்களை வைத்து பார்த்தால், தமிழக அரசு நாடகமாடுவதை போல உள்ளது. விவசாயம் மற்றும் பொதுமக்களை காப்பாற்றி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இன்று மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ள மத்திய அரசு, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவது உறுதி என அறிவிப்பது, நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு என்ற வகையிலான நாடகம் நடப்பதை போன்றே தோன்றுகிறது என சாடியுள்ளனர். இந்த நாடகம் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது என புகார் தெரிவித்துள்ளனர்.

    முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க!முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க!

    ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பல திட்டங்்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு தடுக்க தவறினால், நெடுவாசல் போராட்டம் போன்று மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசு இந்த பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாகவும் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர் விவசாயிகள்.

    English summary
    There is a strong demand for the end of the policy to declare that the hydrocarbon project is not allowed in Tamil Nadu. The demand of the farmers is to declare the Cauvery basin as a protected agricultural zone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X