தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்!

ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோபமாக பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்காமல் விடமாட்டேன் - ஸ்டாலின்- வீடியோ

    தஞ்சாவூர்: ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோபமாக பேசி இருக்கிறார்.

    நேற்றுதான் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். நேற்று திருவாரூரில் பிரச்சாரம் முடித்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் சென்று பிரச்சாரம் செய்தார்.

    தஞ்சாவூர் திலகர் திடலில் இதற்காக மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கோபமாக பேசினார்.

    "சார் நில்லுங்க" .. வழிமறித்து பொள்ளாச்சி குறித்து கேள்வி கேட்ட மாணவி.. திகைத்து சபாஷ் போட்ட ஓபிஎஸ்

    ஆட்சி மாற்றம்

    ஆட்சி மாற்றம்

    திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை.. திட்டங்கள் தீட்டுவது, பணிகள் செய்வது, சாதனைகள் செய்வது, மக்கள் பணியாற்றுவது எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதல் வேலை ஒன்றுதான்.. இறந்தது எவனோ குப்பனோ, சுப்பனோ இல்லை. இறந்தது முதல்வராக இருந்த ஜெயலலிதா.

    அரசியல் வேறு

    அரசியல் வேறு

    ஜெயலலிதாவிற்கும் நமக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள், மாறுபாடுகள் இருக்கலாம். அவரின் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அது வேறு. அரசியல் வேறு. ஆனால் இறந்தது முதல்வர். இந்த மேடையில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் மரண விசாரணையை எதிர்பார்க்காமல் இருக்கலாம்.

    தொண்டனின் வேண்டுகோள்

    தொண்டனின் வேண்டுகோள்

    ஏன் தமிழக மக்கள் கூட எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் ஒவ்வொரு உண்மை தொண்டரும் ஜெயலலிதா மரண விசாரணையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக உண்மையை வெளியே உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி

    ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி

    ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி ஜெயலலிதாவின் அந்த மர்ம மரணத்தை கண்டுபிடித்து அதற்கு உரியவர்களுக்கு தண்டனை கொடுத்து, அதற்கு உரியவர்களை சிறையில் பூட்டுவதுதான் எங்கள் வேலை. அதை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் செய்யாமல் விடமாட்டான்.. இது உறுதி, என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில் கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

    பெரிய வரவேற்பு

    பெரிய வரவேற்பு

    ஸ்டாலின், ஜெயலலிதாவின் பெயரை ஒவ்வொரு முறை கூறும் போது கூட்டத்தில் கைதட்டல் அதிகம் ஆனது. முக்கியமான வழக்கை விசாரிப்போம் என்று அவர் கூறிய போது திமுக தொண்டர்கள் எல்லோரும் கரகோஷம் எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    I will investigate Late Jayalalitha's death case, says DMK chief M K Stalin in Thanjavur campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X