தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்

தஞ்சை அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சை அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள் பணி நியமனம்-வீடியோ

    தஞ்சை: "தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க.. இப்படி நிக்காதீங்க" என்ற திருநங்கைகளின் குரலை கேட்டதும் பொதுமக்கள் ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.. ஆம்.. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு வேலை போட்டு கொடுத்துள்ளனர்.

    திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.

    In a first, Eight transgenders appointed security guards in Tanjore Gov Hospital

    இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முதலாக 8 திருநங்கைகளை பணியமர்த்தியுள்ளார் மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ்.

    In a first, Eight transgenders appointed security guards in Tanjore Gov Hospital

    ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் இவர்கள்தான் அவர்கள். ஒரு ஷிப்ட்டில் 4 பேர் என 2 ஷிப்டில் 8 பேர் வேலை பார்க்கிறார்கள். திருநங்கைகள் காவலாளிகளாக முதல் முறையாக மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

    In a first, Eight transgenders appointed security guards in Tanjore Gov Hospital

    "எங்களை நிறைய பேர் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கற சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போ, இப்படி ஆஸ்பத்திரியில் வேலை தந்துள்ளது பெருமையா இருக்கு. அதுக்கு இந்த ஆஸ்பத்திரி டீன், சுகாதார அமைச்சருக்கு எங்கள் நன்றி. இதே போல் மற்ற துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று இவர்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.

    English summary
    Eight transgenders appointed security guards in Tanjore Gov Hospital by Deen Kumudha Lingaraj
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X