தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Jacto Geo: ஜாக்டோ ஜியோ போராட்டம்.. இன்று மாலை புதிய ஆசிரியர்கள் நியமனம்? அரசு திட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் இன்று மாலைக்கு பிறகு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் இன்று மாலைக்கு பிறகு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது மிக பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

Jacto Geo Protest: The government may employ new workers today evening

தமிழக அரசு இவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறது. இதற்கான கால அவகாசம் இன்று மாலைக்குள் முடிகிறது. இன்று மாலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், இவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் இன்று மாலைக்கு பிறகு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

இதற்காக ஏற்கனவே பல ஆயிரக்கணக்காக மக்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். பட்டதாரி இளைஞர்கள் பலர் இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களில் இருந்து இன்று மாலை சிலர் பணி உத்தரவு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மாலை 6 மணியோடு போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கால அவகாசம் முடிவதால் அதற்கு பின் தமிழக அரசு பணி நியமனம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

English summary
Jacto Geo Protest: The government may employ new workers today evening as the teachers not returned to work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X