தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்

ஜெயலலிதா இருந்திருந்தால் காலில் விழுந்து நன்றி சொல்லி இருப்பேன் என ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Saravana Bhavan Rajagopal: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ

    தஞ்சை: "இந்நேரம் ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவங்க கால்ல விழுந்து என் நன்றியை சொல்லி இருப்பேன்" என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.

    சரவணபவன் ஓனர் ராஜகோபாலுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தாலும் 3-வதாக ஜீவஜோதி என்பவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.

    இதற்காக கல்யாணம் ஆன ஜீவஜோதியின் கணவன் சாந்தகுமாரை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கொடைக்கானல் மலை உச்சியில் அடித்து உதைத்து சாந்தகுமாரை கீழே தள்ளி கொலையும் செய்யப்பட்டார்.

    9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள் 9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள்

    ஓட்டல் நடத்துகிறார்

    ஓட்டல் நடத்துகிறார்

    இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டாலும், நேற்று சுப்ரீம் கோர்ட் அந்த உத்தரவை உறுதிபடுத்தியது. இதையடுத்து விரைவில் அண்ணாச்சி சிறைக்கும் செல்ல உள்ளார். இப்போது ஜீவஜோதி 2-வது கல்யாணம் செய்து கொண்டு தஞ்சையில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் தையல் கடை, ஓட்டல் கடையையும் நடத்தி வருகிறார். இந்த தீர்ப்பு குறித்து ஜீவஜோதி கருத்து சொன்னதாவது:

    கொடுமைப்படுத்தினார்

    கொடுமைப்படுத்தினார்

    "இந்த தீர்ப்பு கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது. இதுக்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றி. அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் என்னுடைய நன்றி. ஏன்னா.. அன்று ராஜகோபால் என்னை அளவுக்கு அதிகமாக கொடுமை படுத்தினார். அதனை என்னால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.

    என் கண்ணீர்

    என் கண்ணீர்

    அதனால் ஜெயலலிதாவை சந்தித்து இது பத்தி சொல்லலாம்னு முடிவு பண்ணேன். ஆனா அன்னைக்கு அவங்க ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என் பிரச்சனை, கண்ணீரை எல்லாம் பார்த்த அவங்க எனக்கு உதவி செய்வதாக உறுதி தந்தாங்க.

    ஆசீர்வாதம்

    ஆசீர்வாதம்

    2001-ம் ஆண்டு அவங்க முதல்வராக பொறுப்புக்கு வந்துட்டாங்க. உடனே சாந்தகுமார் கொலை வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்ய அவங்கதான் நடவடிக்கை எடுத்தாங்க. ஒருவேளை ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்திருப்பேன்.. அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்பேன்.

    நீதி ஜெயிச்சிருக்கு

    நீதி ஜெயிச்சிருக்கு

    அதேபோல இந்த விஷயத்தில் போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை வாங்கி தந்திருக்காங்க. அவர்களுக்கும் என் நன்றி. இதெல்லாம் நடந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருந்தாலும், கடைசியில் நீதிதான் ஜெயிச்சிருக்கு. இது எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றார்.

    English summary
    Jeeva Jothi said "Supreme Court judgement is very pleasing to me, if Jayalalitha was alive, I would be grateful"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X