கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை.. அதற்குள் புதுமணப்பெண் எடுத்த பகீர் முடிவு.. தகிக்கும் தஞ்சை!
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுமணப்பெண் ஒருவர் தனது காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இப்படியும் மக்களா.. 6 கோடி பேர்.. தினமும் 5 லிட்டர்! கோக கோலாதான்
திருமணமான ஒரு வாரத்தில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புதுப்பெண் திடீரென எழுந்து கணவர் தனக்கு கணவன் கட்டிய தாலியை வீட்டில் ஒரு இடத்தில் கழற்றிவைத்துவிட்டார்.

புதுப்பெண்
பின்னர் காலையில் பார்க்கும் போது அந்த புதுப்பெண்ணை காணாமல் கணவர் அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுக்க தேடிய போது அவரது தாலி ஒரு இடத்தில் கிடந்தது. இதையடுத்து மனைவியை காணவில்லை என அந்த இளைஞர் ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் மாயம்
விசாரணையில் மாயமான பெண் திருமணத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததும் தற்போது வெளிநாட்டு இளைஞருடன் நடந்த அந்த திருமணத்தில் துளிக் கூட விருப்பம் இல்லாததும் தெரியவந்தது. காதலனை நினைத்து கடந்த ஒரு வாரமாகவே தூக்கமின்றி நிம்மதியின்றியும் தவித்து வந்துள்ளார்.

காதலனுடன் செல்ல முடிவு
இதையடுத்துதான் மனதில் ஒருவரை வைத்துக் கொண்டு வெளியில் இன்னொருவருடன் வாழக் கூடாது என முடிவு செய்தார். பின்னர் காதலனுடன் சென்று விட நினைத்தார். காதலனை தொடர்பு கொண்டார். தன்னை ஏற்றுக் கொள்கிறாயா என கேட்டவுடன் காதலனும் நான் ஏற்றுக்கொள்கிறேன், நீ வந்துவிடு என கூறியதாக தெரிகிறது.

கோபம்
இதையடுத்து அந்த புதுமணப்பெண் காதலனுடன் செல்ல தயார் நிலையில் இருந்தார். பின்னர் தனது கழுத்திலிருந்த தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து கணவரின் புகாரின் அடிப்படையில் காதலனையும் புதுப்பெண்ணையும் தேடி போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் பெண்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் திருமணம் செய்யாதீர்கள் என்றும் இவ்வாறு திருமணம் செய்துவிட்டு தங்கள் குடும்ப மானம் இன்று காற்றில் பறந்துவிட்டதாக மணமகன் வீட்டார் கோபமாக பேசினர்.