தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்!

ஒரத்தநாட்டில் கொல்லப்பட்ட முதியவர், பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காக கொலை செய்யப்படவில்லை, இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் கொல்லப்பட்ட முதியவர், பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காக கொலை செய்யப்படவில்லை, இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன் நடந்த முதியவரின் கொலை ஒன்று தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 75 வயது நிரம்பிய இவர் கோபிநாத் என்று இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.

நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்? நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

என்ன நடந்தது

என்ன நடந்தது

கோவிந்தராஜ் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் புகைப்படம், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பரபரப்பு

பரபரப்பு

அப்போது இவர் கோபிநாத் என்ற இளைஞரால் தாக்கப்பட்டார். காயங்களுடன் வீட்டிற்கு சென்ற இவர் இரவு பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மிக மோசம்

மிக மோசம்

இது தொடர்பாக இணையத்தில் அதிமுக - பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். இந்த கொலையை செய்த கோபிநாத் திமுகவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஒரத்தநாடு போலீஸ்

ஒரத்தநாடு போலீஸ்

இந்த நிலையில் இந்த கொலை குறித்து ஒரத்தநாடு போலீசார் திடுக்கிடும் உண்மைகளையே வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி கொல்லப்பட்ட கோவிந்தராஜுக்கு மனநலனில் சிறிய சிறிய பாதிப்புகள் இருந்திருக்கிறது. மனரீதியான சில பிரச்சனைகள் வயது முதிர்வு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

தேர்தல் இல்லை

தேர்தல் இல்லை

இந்த நிலையில்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார். அப்போது, அவர் கோபிநாத் வீட்டில் பிரச்சாரம் செய்த போது கோபிநாத்தை தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். அந்த இடத்தில் இருந்த மக்களும் இதை சாட்சியாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று போலீசார் கூறி உள்ளனர். தகாத வார்த்தையில் திட்டியதால் வாய் சண்டை பெரிதாகி உள்ளது. இதில் வந்த சண்டையில்தான் கொலை நடந்துள்ளது.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

அதேபோல் கொலை செய்த கோபிநாத் எந்த விதத்திலும் திமுகவுடன் தொடர்பு இல்லாதவர். திமுகவின் உறுப்பினர் கூட கிடையாது அவர். இது அரசியல் கொலை இல்லை, கோபத்தில் கோபிநாத் செய்த கொலை என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த எப்ஐஆரும் இதேபோலத்தான் பதியப்பட்டு இருக்கிறது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

தாக்குதலுக்கு உள்ளான கோவிந்தராஜ் முதலில் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கே அவரின் மகள் காயங்களை பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின் இரவில் சாப்பிட்டுவிட்டு படுத்த கோவிந்தராஜ் அப்படியே பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Orathanadu old man murder is not because of BJP Political campaign explains police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X