தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்

உயிருடன் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    சவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்..வீடியோ

    தஞ்சாவூர்: சுடுகாட்டில் சவப்பெட்டியை இறக்கி வைத்தபோதுதான குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிந்து அதிர்ந்தனர் பெற்றோரும், உற்றோரும்!

    தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கரன் - பிரித்தி. இவர்களுக்கு கெவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.

    Parents shock as their one year child was still alive at funeral

    திடீரென கெவினுக்கு ஜூரம் வந்துவிட்டது. அதனால், இன்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி சென்றனர். அப்போது, செக் செய்த டாக்டர்களோ, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றனர்.

    இதனால் அதிர்ந்த பெற்றோர், அழுதுகொண்டே குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்தனர். அப்போது குழந்தையை சவப்பெட்டியில் இருந்து குழந்தையின் அசைவு தெரியவும், அதிர்ச்சியும் ஆச்ரியமும் அடைந்த பெற்றோர், திரும்பவும், கெவினை தூக்கிக்கொண்டு அதே ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    Parents shock as their one year child was still alive at funeral

    குழந்தைக்கு உயிர் இருக்கு.. என்னன்னு பாருங்க என்று கண்ணீருடன் பதறியவாறே சொன்னார்கள். அப்போது டாக்டர்கள், இப்பதான் சில நிமிடத்துக்கு முன்புதான் உயிர் போயிருக்கு என்றனர். இதை கேட்டதும், திரும்பவும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆவேசம் ஆகிவிட்டனர்.

    உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையை முதலில் தூக்கிட்டு வந்தபோதே டாக்டர்கள் சரியாக செக் செய்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது. இறந்துவிட்டதாக சொல்லி, 4 மணி நேரம் கழித்துதான் உயிர் போயிருக்கு"என்று அழுதவாறே தெரிவித்தனர்.

    English summary
    Parents shock as their one year child was still alive at funeral and Public Protest against Tanjore Gov Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X