நான் பாவம் விட்ருங்க! முந்திரி காட்டிற்குள் கதறிய பெண்! மாறிமாறி சிதைத்த 4 பேர்! திடுக்கிட்ட தஞ்சை.!
தஞ்சாவூர் : தஞ்சை அருகே வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணை முந்திரி காட்டில் வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 22 வயான இளம் பெண் ஒருவர், பனிரெண்டாம் வகுப்பு படித்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது பெற்றோர் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் வேலை முடிந்துவிட்ட நிலையில் மளிகைகடையில் இருந்து அந்த இளம் பெண் கிராமத்துக்குச் செல்வதற்காக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அம்மாடி! வயாகரா கொடுத்தே இளம்பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்.. வயாகரா 'அது'க்கு மட்டும் இல்லையாம்

பாலியல் பலாத்காரம்
அப்போது அருகில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த இளம்பெண்ணை மறித்து பேசியுள்ளார். ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் அந்த இளம்பெண்ணும் அவருடன் பேசியுள்ளார். மேலும் வீட்டிற்கு பேருந்தில் செல்ல வேண்டாம் எனவும், இருசக்கர வாகனத்தில் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் ஏறு என கூறியுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், இதனால் அவரது செல்போனை கொடியரசன் பறித்துக்கொண்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் வேறு வழியின்றி வாகனத்தில் ஏறியுள்ளார்.

முந்திரி காட்டில் அதிர்ச்சி
பின்னர் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப்பட்டியை தாண்டியதும் கொடியரசன் திடீரென முந்திரி காட்டுப்பகுதிக்கு திருப்பி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சத்தம் போட்ட நிலையிலும், கொடியரசன் வலுக்கட்டாயமாக அங்குள்ள முந்திரி காட்டுக்கு இளம்பெண்ணை கடத்திச்சென்றார். அங்கு கொடியரசனின் நண்பர்களான சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 3 பேர் இருந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

கொலை மிரட்டல்
ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பிடித்துக் கொண்டு அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். மேலும் இங்கிருந்து ஓட முயன்றதால் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 4 பேரும் இளம்பெண்ணை கற்பழித்தனர். 4 பேரும் முந்திரி காட்டுக்குள் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்த நிலையில் யாரிடமாவது இதுகுறித்து சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

4 பேர் கைது
இதையடுத்து வீட்டுக்கு முந்திரி தோப்பில் இருந்து நடந்தே வந்த இளம்பெண் இதுபற்றி தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பின்னர் வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த தஞ்சை வல்லம் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, கொடி அரசன், சுகுமாறன், கண்ணன், தமிழரசன் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.