தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது..புகழேந்தி தடாலடி | pugazhendi Pressmeet

    தஞ்சாவூர்: அமமுகவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்றும் யாரையும் நம்பி நான் இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

    அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் ஆர் கே நகர் தொகுதியின் எம்எல்ஏவானதன் மூலம் மக்களின் ஆழம் பார்க்கத் தொடங்கினார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த 18 பேரும் சபாநாயகரின் உத்தரவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்றார்.

    அமமுக

    அமமுக

    இதையடுத்து தமிழக சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் எம்எல்ஏவானார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தங்கதமிழ்ச் செல்வனும் வெளியேறி திமுகவில் இணைந்தார்.

    புகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்!புகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்!

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இந்த நிலையில் அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை பெங்களூர் புகழேந்தி சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஹோட்டல் அறையில் தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான் என பேசிய அவர் தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    புகழேந்தியின் பெயர்

    புகழேந்தியின் பெயர்

    இதுகுறித்து தினகரன் கூறுகையில் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் அமமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். அதில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இத்தனை நாட்கள் இருந்த புகழேந்தியின் பெயர் விடுபட்டுள்ளது.

    கட்சியே என்னுடையது

    கட்சியே என்னுடையது

    இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்கள் கேள்விக்கு புகழேந்தி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அமமுகவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். நான் யாரையும் நம்பி இல்லை என புகழேந்தி ஒரே போடாக போட்டுள்ளார்.

    English summary
    Bengaluru Pugazhendi says that AMMK party belongs to me and no one expels from AMMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X