தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை "ராணி பேரடைஸ்" தியேட்டர் ஓனர்.. குமார் வீட்டில் ரெய்டு.. ஒரே நேரத்தில் 4 இடத்தில் அதிரடி.. ஏன்

தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர் குமார் என்பவர் வீட்டில் ரெய்டு

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர், குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சையின் மிக பிரபலமான நபர் குமார்.. இவர் ஒரு தொழில் அதிபரும்கூட.. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்.. ராணி பேரடைஸ் தியேட்டர் குமார் என்றால் தஞ்சை பகுதிகளில் மிகவும் ஃபேமஸ்.

தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் இந்த ராணி பேரடைஸ் தியேட்டர் உள்ளது.. இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது..

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக, குமார் மீது புகார் கிளம்பி உள்ளது.. மேலும், வருமான வரியையும், ஜிஎஸ்டி வரியையும் குமார் ஒழுங்காக செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாகவும் சொல்லப்படுகிறது..

raid on places owned by tanjore famous theater owner kumar, complaints of tax evasion income tax department raids

இதையடுத்து, 16 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குமாருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள், தியேட்டர், அவரது வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடத்தியதாக தெரிகிறது.. ஒரே நேரத்தில் இந்த 4 இடங்களிலும் ரெய்டு நடந்துள்ளது தஞ்சையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் கசிந்து வருகிறது..

வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை..

English summary
raid on places owned by tanjore famous theater owner kumar, complaints of tax evasion income tax department raids தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர் குமார் என்பவர் வீட்டில் ரெய்டு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X