தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க ஒதுக்கிய காசு டீ சாப்பிடக் கூட பத்தாது... மோடிக்கு ரூ.17 மணி ஆர்டர் அனுப்பிய விவசாயிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் அறிவிப்புக்கு எதிர்ப்பு.. மோடிக்கு மணி ஆர்டர் அனுப்பிய விவசாயிகள்- வீடியோ

    தஞ்சை: பிரதமர் நரேந்திர மோடிக்கு, 17 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பி தஞ்சை விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. இதற்கு முக்கிய காரணம் விவசாய கடன் தள்ளுபடி என்ற காங்கிரசின் வாக்குறுதி தான் என கூறப்பட்டது.

    தோல்விகளால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று விரும்பியது.

    விவசாயிகளுக்கு ரூ.6,000

    விவசாயிகளுக்கு ரூ.6,000

    இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச வருவாய் வழங்கும் திட்டம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிவித்தார். இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதனால் மாதிரியான சலுகைகளை அறிவிப்பது என்று மத்திய அரசு தீவிரமாக யோசித்தது, அண்மையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இரண்டு ஹெக்டேருக்கு நிலம் வைத்துள்ள சிறு - குறு விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.

    விவசாயிகள் வேதனை

    விவசாயிகள் வேதனை

    இந்நிலையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது தங்களுக்கு ஆண்டு முழுவதும் தேனீர் அருந்த கூட போதாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடன் தள்ளுபடி அறிவிக்காத மத்திய அரசு ஒரு நாளைக்கு தங்களுக்கு 17 ரூபாய் தான் ஒதுக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு 17 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பும் போராட்டத்தில் தஞ்சை விவசாயிகள் ஈடுபட்டனர். முன்னதாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த தமிழக விவசாய சங்கத்தினர், 17 ரூபாயை பிரதமருக்கு மணி ஆர்டர் மூலம் அனுப்பி, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மோடிக்கு மணி ஆர்டர்

    மோடிக்கு மணி ஆர்டர்

    முன்னதாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் கடந்த டிசம்பரில் வெங்காயத்தின் விலை கிலோ ஒரு ரூபாய் 41 பைசாவுக்கு விலை போனது. இதனால், தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு கிடைத்த 1,064 ரூபாய் தான் கிடைத்தது. இதனால், நொந்துபோன விவசாயி ஒருவர், அதனை பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர் அனுப்பி வைத்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Thanjavur farmers sent Rs 17 by money order to Prime Minister Narendra Modi, protesting against the grant of Rs 6,000 per annum for farmers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X