தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதாகரன், இளவரசியின் சொத்துக்கள் அடுத்தடுத்து அரசுடைமை.. இன்று இழந்தது தஞ்சையில்.. தமிழக அரசு அதிரடி

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையில் சசிகலா உறவினர்கள் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பது அரசியல் வட்டாரததில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தொடரும் ‘ஆட்சியர்களின்’ அதிரடி…இளவரசி, சுதாகரனின் தஞ்சை சொத்துகள் அரசுடமை!

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ல் உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.

    இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். இளவரசியும் விடுதலையாகிவிட்டார், சுதாகரன் இன்னமும் அபராத தொகையை செலுத்தவில்லை. அபராத தொகையை சுதாகரன் செலுத்திவிட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.

    சென்னை சொத்துக்கள்

    சென்னை சொத்துக்கள்

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்தது.
    இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகள் நேற்று அரசுடைமையாக்கப்பட்டன, சென்னை டி.டி.கே சாலையிலுள்ள ஒரு சொத்தும், சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள ஐந்து சொத்துகளும் அரசின் சொத்தாக உரிமை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆறு சொத்துக்கள்

    ஆறு சொத்துக்கள்

    சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான ஆறு சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சொத்தில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஊத்துக்காடு

    ஊத்துக்காடு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரன் சொத்துக்களை முடக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில்.சசிகலாவின் உறவினா்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பங்குதாரா்களாக உள்ள சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான 144.75 ஏக்கா் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தற்போது மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது தமிழ்நாடு அரசின் சொத்து என பெயா் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    வ.உ.சி. நகர்

    வ.உ.சி. நகர்

    இந்நிலையில் இன்று தஞ்சை வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள 26 ,540 சதுர அடி காலி மனையை அரசு இன்று காலை பறிமுதல் செய்துள்ளது. இது அரசுடமையாக்கப்பட்டது. இனி அதிலிருந்து வரக்கூடிய வாடகை வாடகை நிலுவைத் தொகை ஆகியவை அரசுக்கு சொந்தமாகும். இந்த சொத்து கடந்த 1995 ஆம் ஆண்டு 11 லட்சத்திற்கு வாங்கப்பட்டது கடந்த 14 2 2017 அன்று வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி அரசுடமை அமைக்கப்பட்டுள்ளது.

    English summary
    sasikala's relations sudhakaran and ilavarasi property in thanjavur: now state owned property, The government confiscated 26,540 square feet of vacant land in VOC Nagar, Thanjavur this morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X