ஆபாசம்.. "**டேஷ்" ரூல்ஸ் பேசுறியா.. பஸ்ஸில் திட்டி தீர்த்த கண்டக்டர்.. அதிர்ந்து போன மாணவிகள்.. ஏன்?
தஞ்சை: சீட்டில் உட்கார கூடாது என்றும், வண்டி நின்றதுமே ஏறி போக வேண்டியதுதானே? என்றும், மாணவிகளிடம் பஸ் கண்டக்டர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது..
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.. குறிப்பாக கீழப்பழுவூர், சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், முடிகொண்டான் திருமானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் தஞ்சையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.. இந்த மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா படித்த பெங்களூரின் புகழ் பெற்ற பள்ளி மாணவிகள்.. குடுமிப்பிடி சண்டையிட்டு உருண்டு.. பரபரப்பு

அரியலூர்
இது இவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.. ஆனாலும், இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவிகளை பஸ்களில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.. இதனால், மாணவிகள் பஸ்ஸில் ஏறினாலே, அவர்களிடம் எரிந்து விழுந்து பேசுகிறார்களாம் சில கண்டக்டர்கள்.. அப்படித்தான், தஞ்சையில் இருந்து அரியலூர் வருவதற்கு அரசு பஸ்ஸில் ஏறி மாணவிகள் சீட்டில் உட்கார்ந்து உள்ளனர். இதைப்பார்த்த அந்த பஸ் கண்டக்டர், மாணவிகளை சீட்டில் உட்கார கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

பஸ் கண்டக்டர்
ஒரு கட்டத்தில், கண்டக்டர் எல்லைமீறி ஆபாசமாகவே மாணவிகளை பேசிவிட்டார்... "ஏன் இப்படி முன்னாடியே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துடறீங்க.. பஸ் கிளம்பும்போது மட்டும் ஏறுங்கள்... இல்லாட்டி அடுத்த பஸ்சில் வாங்க.. ஓசியில் பஸ்ஸில் வரக்கூடாது" என்று பஸ்ஸில் உட்கார்ந்திருந்த மாணவிகளிடம் பொரிந்து தள்ளி உள்ளார் கண்டக்டர். இதை அந்த மாணவிகள் தட்டி கேட்டனர்.. பஸ் வரும்போதுதானே ஏற முடியும்? பஸ் கிளம்பிடும் என்பதால்தான் முன்கூட்டியே ஏறுகிறோம் என்று பதில் தந்தனர்.

வாக்குவாதம்
கண்டக்டர் பேசுவதை கவனித்த மற்ற பயணிகள், மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.. இதனால் பஸ்ஸில் வாக்குவாதம் வெடித்தது.. 'காசு கொடுத்து வர்றவங்க மட்டும்தான் சீட்டில் உட்கார வேண்டும், பஸ் பாஸ் வைத்து இருக்கும் மாணவ, மாணவிகள் நின்று கொண்டு வரவேண்டும்' என்று கண்டக்டர் கறாராக சொன்னார்.. அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆபாசமாகவும் திட்டினார்.. இது அத்தனையும் வீடியோவாக வெளிவந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அரியலூர்
தமிழக முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் ஏற்படாத வகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரியலூர்- தஞ்சை வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், அரசுக்கும் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.