தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி

Google Oneindia Tamil News

தஞ்சை: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், இடிந்த வீட்டை அளப்பதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக சர்வேயர் கேட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயி உயிரிழந்தார்.

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேப்பத்தூர் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 48). இவர் தனது வீட்டை அளப்பதற்காக 3 மாதம் முன்பு பணம் கட்டி உள்ளார் இதனைத் தொடர்ந்து, இன்று சர்வேயர் மோகனாம்பாள் என்பவர் வந்துள்ளார்.

surveyor Asked bribe of Rs 10,000; shocked farmer died in Kumbakonam

வீட்டை பாதி அளந்ததும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு விவசாயியான தனசேகரனை வர சொல்லி உள்ளார். அங்கு, தனசேகர் சென்றதும் வீடு அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

தன்னிடம் 3, 000 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர், உறவினர்களிடம் இருந்ததை வாங்கி, மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 4,000 கேட்டதற்கு தனசேகரன் இல்லை என்று தெரிவிக்கவே அவரை சர்வேயர் திட்டியதாக தெரிகிறது. இதனால், நெஞ்சு வலியால் சுருண்ட தனசேகரன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் தனசேகரனை மீட்டு, அருகிலுள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். தனசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, விவசாயி தனசேகரனின் மகன் சுதர்சன் திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியில் விவசாயி உயிழந்ததாக தகவல் பரவியதால், திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Police investigation: surveyor Asked bribe of Rs 10,000; shocked farmer died in Kumbakonam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X