தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு

Google Oneindia Tamil News

தஞ்சாவூர் : அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்காக பல தொண்டுகளை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் மிக தொன்மையான மொழியான தமிழை சிறப்பிக்கும் விதமாக அயர்லாந்தில் தமிழ்மொழியை புகழ்ந்து பாடல் இயற்றப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் தமிழ் புகழ்ச்சிப்பாடல்

தாய்மொழிகள் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஐரோப்பிய தேசமான அயர்லாந்தின் லெட்டர்கென்னி என்ற நகரில் வசிக்கும், காரைக்குடிக்கு அருகில் உள்ள கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் தமிழ்மைந்தன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஜான் ரிச்சர்டு எழுதி தயாரித்த "தமிழே உயிர்மொழி" என்ற தமிழ்மொழிப் புகழ்ச்சிப் பாடல் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியனால் 22-02-2021 அன்று வெளியிடப்பட்டது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வெளியீடு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வெளியீடு

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தாய்மொழிகள் தின விழாவில் துணைவேந்தரால் வெளியிடப்பட்டு, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் தங்க. ஜெயராமனால் பெற்றுக் கொள்ளப்பட்டது. இப்பாடலை வெளியிட அயலகக் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் குறிஞ்சிவேந்தன் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மாணவர்கள் வரவேற்ற தமிழ் பாடல்

மாணவர்கள் வரவேற்ற தமிழ் பாடல்

பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருமக்கள், மாணவர்கள் அரங்கு நிறைய பங்கேற்ற இந்நிகழ்வில் தமிழ்ப் புகழ்ச்சிப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இப்பாடலை விழாவில் பங்கேற்றோர் வெகுவாகப் பாராட்டினர்.

பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கு.சின்னப்பன், மொழிப் புலத் தலைவர் இரா. காமராசு, இலக்கியப் புலத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை, மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழில் பேசுவோம்

தமிழில் பேசுவோம்

வீடுகளில் பிறமொழிகளை முதன்மையாகப் பேசும் தமிழ் உறவுகள் ஒரு சிலரேனும், பாடலின் வழியாகத் தமிழ் பேச ஆரம்பித்தால் அதுவே பாடலின் நோக்கத்திற்கான வெற்றியாகும் என பாடலாசிரியர் தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு தெரிவித்தார்.

English summary
Tamil language praising song which is written by tamil poet from Ireland was released in Tanjore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X