தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுட்டுக் கொல்லுங்க அவங்களை.. தஞ்சையில் கொந்தளித்த கல்லூரி மாணவிகள்

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்க.. கொந்தளித்த கல்லூரி மாணவிகள்

    தஞ்சாவூர்: "இந்த மாதிரி தப்பு செய்றவங்களுக்கு இந்தியாவில் தண்டனை கம்மி.. அதனால் பாலியல் கொடுமை செய்ற யாராக இருந்தாலும் சரி, அவங்களை சுட்டு கொல்லணும்" என்று கல்லூரி மாணவிகள் ஆவேசமாக கூறி வருகிறார்கள்.

    பொள்ளாச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் சீரழிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    Tanjore Girls College Student Protest for Pollachi issue

    கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட இந்த கும்பதில் இப்போதைக்கு 4 பேரை மட்டுமே போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அதனால் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், கைதானவர்களுக்கு தீவிரமான தண்டனை தர வேண்டும் என்றும் பரவலாக அனைத்து தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

    "ரோட்டுல திரியறதை கூட்டிவந்து, டிரஸ் கழட்டறானுங்க.. வீடியோ பொய்".. திருநாவுக்கரசின் தாய் சொல்கிறார்

    இதே கோரிக்கையை வலியுறுத்திதான், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, முழுக்க முழுக்க கல்லூரி பெண்கள் காலேஜ் முன்பு இந்த போராட்டத்தில் இறங்கினர்.

    "இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு எல்லாம் இந்தியாவில் தண்டனை ரொம்பவும் கம்மி. அதனால் பாலியல் குற்றம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனையை கடுமையாக வழங்க வேண்டும், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று ஆவேசமாக கூறினர். இதையே வலியுறுத்தி முழக்கங்களாகவும் கோஷமிட்டனர்.

    English summary
    Tanjore Kundhavai Nachiyar Govt Art College for Women Protest against Pollachi Gang Rape Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X