தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜாவிடமிருந்து தன் "உயிரை" காத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட பெரியவர் சிவ சண்முகவேலு!

கஜா புயலிலும் புத்தகங்களை 60 வயது பெரியவர் பாதுகாத்துள்ளார்.

Google Oneindia Tamil News

தஞ்சை: கஜா வந்துவிட்டான் என தெரிந்ததும், ஓடிப்போய் தன் புத்தகங்களை கட்டிப்பிடித்து கொண்டு ஒரு சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விட்டார் 60 வயது ஹீரோ சிவசண்முகவேலு!

ஆமாம்.. இவருக்கு புத்தகம் என்றால் உயிர்.. வாழ்க்கை.. சுவாசம்... எல்லாமே புத்தகம்தான். வீடு முழுக்க புத்தகங்கள்தான் நிரப்பி வைத்துள்ளார்.

 ரஷ்யன் மொழி பேசுகிறார்

ரஷ்யன் மொழி பேசுகிறார்

60 வயதாகும் இவருடைய மனைவி, குழந்தைகள்தான் எல்லாமே புத்தகங்கள்தான். சமூக ஆர்வம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ள சிவசண்முகவேல் ஒன்றரை ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். ரஷ்யன் உள்ளிட்ட 16 மொழிகளில் பொளந்து கட்டுகிறார் மனுஷன்.

 இறுக்க கட்டிக் கொண்டார்

இறுக்க கட்டிக் கொண்டார்

ஆனால் இதெல்லாம் அந்த நாசமா போன கஜாவுக்கு தெரியுமா? அன்னைக்கு இரவு பேய்க்காத்து சுழட்டி சுழட்டி அடிக்க ஆரம்பிக்க பதறியே போனார் நம்ம ஹீரோ. வீட்டிலிருந்து தட்டுமுட்டு சாமான்கள், மற்ற பொருட்களை எல்லாம் விட்டுவிட்டு, ஓடிப்போய் புத்தகங்களை இறுக்கி கட்டிக் கொண்டார்.

 எல்லாமே புத்தகங்கள்

எல்லாமே புத்தகங்கள்

சும்மாவா என்ன? எல்லாமே தன் உழைப்பால் வந்த பணத்தை கொண்டு இவ்வளவு வருஷமா கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த புத்தகமாச்சே! நடுராத்திரி அடித்த புயலில் வீடே உருக்குலைந்து விட்டது.

 பாதுகாத்த புக் மேன்

பாதுகாத்த புக் மேன்

ஆனால் ஒரு புத்தகம்கூட சிதையவில்லை.. சிதறவில்லை! இதை பற்றி கேட்டால், "இந்த புஸ்தகம் எல்லாம் எனக்கு பின்னால் வரும் சந்ததிகளுக்கு சொந்தமாக போகுது. அதான் இப்படி உசுர குடுத்து பாதுகாத்தேன்" என்கிறார் இந்த புக் மேன்!!

English summary
Tanjore Man saved the books from the Gaja Cyclone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X