தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. என்னை காப்பாத்துங்க.. கதறும் தஞ்சை பெண்

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

தஞ்சை: "துபாய் நாட்டில் வீட்டு வேலைக்குன்னு கூட்டிட்டு போய் என் முகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. கட்டியிருக்கிற துணி கூட இல்லாமல் என்னை தவிக்க விட்டுட்டாங்க.. என்னை தயவு செய்து காப்பாத்துங்க" என்று பெண் ஒருவர் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

தஞ்சை மாவட்டம் குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமதி. இவர் தஞ்சையை சேர்ந்த ஆனந்த் என்ற நபர் மூலம் துபாய் நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக சென்றார். 4 மாதங்கள் ஒரு வீட்டில் அங்கு வேலை பார்த்திருக்கிறார்.

இந்தநிலையில், அன்புமதியின் உறவினர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், "துபாயில் வேலைக்கு வைத்தவர்கள் அன்புமதியை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.

கட்டிய மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்.. கதறி அழுது டிராமா போட்ட கொடுமை! கட்டிய மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்.. கதறி அழுது டிராமா போட்ட கொடுமை!

சரமாரி தாக்குதல்

சரமாரி தாக்குதல்

வெந்நீரை அவரது முகத்தில் ஊற்றியும் துன்புறுத்தி உள்ளனர். இதை அவர் பேசி அனுப்பிய வீடியோவை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். பேசப்பட்ட சம்பளமும் இதுவரை அன்புமதிக்கு வழங்கப்படவில்லை.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

கொடுமை செய்யப்பட்ட அன்புமதி அங்கு உள்ள தமிழர்களால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தற்போது வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து தாயகம் வர முடியாத சூழலில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சமாக உள்ளது. எனவே இந்திய அரசு அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும்." என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடுதண்ணீர்

சுடுதண்ணீர்

இதையடுத்து அன்புமதி பேசிய வீடியோவையும் மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் அன்புமதி நைட்டி அணிந்தபடி கதறி அழுது தன் துயரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காப்பாத்துங்க

காப்பாத்துங்க

அதில், "துபாய் நாட்டில் வீட்டு வேலைக்குன்னு கூட்டிட்டு போய் என் முகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. கட்டியிருக்கிற துணி கூட இல்லாமல் என்னை தவிக்க விட்டுட்டாங்க.. என்னை தயவு செய்து காப்பாத்துங்க.. என் சம்பள காசையும் புடுங்கி வெச்சிக்கிட்டாங்க" என்று கண்ணீர்விட்டு கூறியிருக்கிறார்.

English summary
Relatives requested Tanjore district Collector to rescued a Woman from Dubai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X