தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி!

தஞ்சை விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள் படையணி அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சுகோய் இந்த படையணியை தொடங்கி வைக்கிறார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவின் விமானப்படை சார்பாக பிரம்மோஸ் சோதனை நடத்தப்பட்டது. சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) மூலம் இந்த பிரம்மோஸ் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை மிக துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது.

    பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) இணை இந்தியாவின் விமானப்படைக்கு அதிக பலம் கொடுக்கும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இதையடுத்து சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) விமானத்தை இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்களில் களமிறக்க இந்திய பாதுகாப்பு படை முடிவெடுத்துள்ளது.

    முக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார் முக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்

    தஞ்சாவூர் எப்படி

    தஞ்சாவூர் எப்படி

    அதன் ஒரு கட்டமாக இன்று தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்தில், சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. முப்படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்கேஸ் படாரூயா ஆகியோர் இந்த படையணியை தொடங்கி வைக்கிறார்கள்.

    என்ன பெயர்

    என்ன பெயர்

    இந்த படைக்கு 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படை இந்தியாவின் மிகவும் வலிமையான விமானப்படை அணியாகும் . இந்த சுகோய் 30 எம்கேஐ பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கி சென்று தாக்க கூடிய வலிமைப்படைத்தது. இதன் மூலம் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முக்கிய எல்லை அருகே அடிக்கடி சுகோய் 30 எம்கேஐ இனி ரோந்து செல்லும்.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    விமானப்படை பயன்பாட்டிற்கு மட்டும் இது பயன்படுத்தப்படாது. இந்திய பெருங்கடலில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்கவும், ஊடுருவலை தடுக்கவும் இதை பயன்படுத்த இருக்கிறார்கள். இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

    எத்தனை இருக்கிறது

    எத்தனை இருக்கிறது

    இந்தியாவில் மொத்தம் 250 சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் உள்ளது . இதில் தற்போது முதல்முறையாக தென்னிந்தியாவில் சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அதிலும் தஞ்சாவூரில் அந்த போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Thanjavur: Air Force officially inducts first Sukhoi-30MKI fighter aircraft squadron at the airbase for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X