தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 விமானம்.. தஞ்சையில் சீறிப்பாய்ந்த சுகோய் 30 எம்கேஐ.. தமிழகத்தை காக்கும் புலியும் சுறாவும்!

தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இன்று சேர்க்கப்பட்ட சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் வானத்தில் பறந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இன்று சேர்க்கப்பட்ட சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் வானத்தில் பறந்தது. விமானப்படை அதிகாரிகள், விருந்தினர்கள் காணும் வகையில் சுகோய் 30 எம்கேஐ விமானம் வானத்தில் பறந்தது.

    தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த படைக்கு 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    புலியின் வேகம் மற்றும் சுறாவின் பலத்துடன் இந்த படை செயல்படும். பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இது தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. வான் எல்லை பாதுகாப்பு, கடல் எல்லை ஊடுருவல் இரண்டையும் இது கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான்காவது தலைமுறை

    நான்காவது தலைமுறை

    சுகோய் 30 எம்கேஐ விமானம் சுகோய் விமான வகைகளில் நான்காவது தலைமுறை விமானம் ஆகும். பல சுகோய் விமானம் பழுதானது மற்றும் விபத்துக்கு உள்ளானதை அடுத்து இந்த சுகோய் 30 எம்கேஐ விமானம் உருவாக்கப்பட்டது. டிஆர்டிஓ மற்றும் ரஷ்ய உதவியுடன், புதிய வசதிகளுடன் சுகோய் 30 எம்கேஐ உருவாக்கப்பட்டுள்ளது. இது சுகோய் ரக விமானத்தில் மிகவும் நவீனமானது ஆகும்.

    டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி!டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி!

    ரஷ்யா இந்தியா

    ரஷ்யா இந்தியா

    இந்த சுகோய் 30 எம்கேஐ விமானம் 2.5 டன் எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்க கூடியது. சுகோய் 30 எம்கேஐ இந்த சோதனையில் கடந்த டிசம்பர் மாதம் வெற்றி பெற்றது. தற்போது ஒரே மாதத்தில் சுகோய் 30 எம்கேஐ தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது.

    1500 கிமீ

    1500 கிமீ

    சுகோய் 30 எம்கேஐ பொதுவாக 1500 கிமீ தூரம் வரை ஒரு முறை எரிபொருள் நிரப்பி ஓட்ட முடியும். இதில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்ப முடியும் . இதில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணை 290 கிமீ தூரம் வரை தாக்க கூடியது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    மொத்தம் 6 சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் தற்போது தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில விமானங்கள் வரும் காலத்தில் கொண்டு வரப்படும். இதற்காக 18 விமானப்படை விமானிகள் தஞ்சாவூரில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவின் பாதுகாப்பில் இது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

    பறந்தது

    பறந்தது

    இன்றுதான் சுகோய் 30 எம்கேஐ தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டது. தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்ட சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் வானத்தில் பறந்தது. விமானப்படை அதிகாரிகள், விருந்தினர்கள் காணும் வகையில் சுகோய் 30 எம்கேஐ விமானம் வானத்தில் பறந்தது. இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    English summary
    Thanjavur: Air Force Sukhoi-30MKI gave a great show in the base after launching.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X