தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.. ஏராளமாக திரண்ட பக்தர்கள் - வீடியோ

    தஞ்சாவூர்: 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி தஞ்சாவூர் நகரே பெருவிழா கோலம் பூண்டிருக்கிறது.

    தமிழர்களின், திராவிடர் கலையின் மெச்சத்தகுந்த உச்சமாக போற்றப்படுகிறது தஞ்சை பெரிய கோவில். விண்முட்ட நிற்கும் கற்கோபுரத்தை பெருவேந்தன் ராஜராஜனும் அன்றைய தமிழ்க் குடிகளும் கட்டி முடித்த வித்தையை நினைத்தாலே வரலாறு சிலிர்க்கும்.

    Thanjavur Big temple gets ready for consecration on tomorrow

    இத்தகைய பெருமைக்குரிய தஞ்சை பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரிய் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

    இக்குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்த வேண்டும் என்பது பல்வேறு தரப்பினர் கோரிக்கை. ஆனால் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்றது ஒருதரப்பு.

    இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. அப்போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி மொழி அளித்தது. இதனையடுத்து இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

    இலங்கை சுதந்திர தினம்: தமிழில் தேசிய கீதம் இல்லை- இந்தியா கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்இலங்கை சுதந்திர தினம்: தமிழில் தேசிய கீதம் இல்லை- இந்தியா கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

    நாளை நடைபெறும் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தற்போது தஞ்சாவூர் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சாரை சாரையாக தஞ்சை பெரிய கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.

    தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி தஞ்சாவூர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Thanjavur Big temple gets ready for tomorrowconsecration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X