தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திரும்பி வந்தால் உடைந்து போவார்.. தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு.. பரபரப்பு!

தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு - வீடியோ

    தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது .

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.

    இன்னும் ஒரு வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    நானே ஒரு புறம்போக்கு.. பரதேசி.. என்னை போய்.. பஞ்சாயத்து முடிஞ்சாச்சு கிளம்பு.. நித்தியானந்தா செம நானே ஒரு புறம்போக்கு.. பரதேசி.. என்னை போய்.. பஞ்சாயத்து முடிஞ்சாச்சு கிளம்பு.. நித்தியானந்தா செம

    என்ன ஏற்பாடுகள்

    என்ன ஏற்பாடுகள்

    இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் அவரின் வீட்டை இடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சசிகலாவிற்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கிறது. முக்கியமாக மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் அதிக வீடுகள், இடங்கள் உள்ளது.

    என்ன வீடு

    என்ன வீடு

    இந்த நிலையில்தான் தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் அருகே மகர் நோன்பு சாவடி பகுதியில் அந்த வீடு இருக்கிறது. இது தொடக்கத்தில் தஞ்சாவூரில் சசிகலா வாழ்ந்த சொந்த வீடு ஆகும். இதை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அந்த வீடு பழமையானதாக உள்ளது. பாதுகாப்பு இல்லை என்று கூறி இதை இடிக்க உள்ளனர். இதற்காக அந்த வீட்டில் இருக்கும் யாராக இருந்தாலும் அதை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல்

    அரசியல்

    தஞ்சாவூரில் பல பழைய வீடுகள் இருக்கிறது. ஆனால் சரியாக சசிகலா வீட்டை மட்டும் குறி வைத்து இப்படி செய்வது ஏன்? இதற்கு பின் பெரிய அரசியல் அழுத்தம் இருக்கிறது. சசிகலா திரும்பி வந்தால் மனம் உடைந்து போவார் என்று அவரின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Thanjavur corporation decides to demolish Sasikala home in the town.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X