தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்

பேத்திக்கு மருத்துவ உதவி செய்யுமாறு பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊனமுற்ற பேத்தியை காப்பாற்ற பாட்டி உருக்கமான வேண்டுகோள்-வீடியோ

    தஞ்சை: "எங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்களேன்" என்று கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஆனந்த பாபுவின் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. 33 வயசு. கிராமத்தில் குடிநீர் தொட்டியை இயக்கி வருகிறார். இவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதால் ஊர் பொது காரியங்களை முன்னின்று செய்து வந்தார்.

    The social activist family has requested for medical help to their daughter

    கடந்த வாரம், பஞ்சாயத்து லாரி தண்ணீரை பதுக்கியதை தட்டிக் கேட்க போய், அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரது அப்பா ஒரு கூலி தொழிலாளி, ஆனந்த் பாபுவிற்கு 3 சகோதரிகள்.

    யார் இந்த ராஜா?.. சிக்கி சிதைந்த பெண்கள் எத்தனை பேர்.. பொள்ளாச்சியை விஞ்சிய கொடுமையார் இந்த ராஜா?.. சிக்கி சிதைந்த பெண்கள் எத்தனை பேர்.. பொள்ளாச்சியை விஞ்சிய கொடுமை

    மூத்த சகோதரியான விஜயலட்சுமிக்கு வாய் பேச முடியாது. மாற்றுத் திறனாளியும்கூட. இவரது மகள் பரமேஸ்வரி. பிறந்ததிலிருந்தே சுமார் 14 ஆண்டுகளாக கை கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகள் செயல்படாமல் படுத்த படுக்கையில் உள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி உள்ள நிலையில், வீட்டில் யாருக்குமே மருத்துவம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    "ஆனந்த்பாபு மட்டும்தான் குடும்பத்தை கவனிச்சிட்டு இருந்தான். இப்போ அவனை கொன்றுவிட்டார்கள் எங்கள் குடும்பமே கஷ்டத்தில் தவிக்குது. யாராவது என் பேத்திக்கு மருத்துவம் பார்க்க உதவி செய்தால் நல்லா இருக்கும் என்று ஆனந்த்பாபுவின் தாயார் கெஞ்சி கேட்டு கொண்டுள்ளார்.

    English summary
    Tanjore Social activist AnandBabu family has demanded for medical help for their disabled daughter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X