தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேகதாது அணை.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் நடவடிக்கை.. வைரமுத்து பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மேகதாது அணை.. வெந்த புண்ணில் விரலை பாய்ச்சும் நடவடிக்கை - வைரமுத்து-வீடியோ

    தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிறப்பு பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வைரமுத்து தெரிவித்தார்.

    கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணங்களும் உரிய பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    மக்களுக்கு ஆறுதல்

    மக்களுக்கு ஆறுதல்

    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சையை அடுத்த வல்லத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கவிஞர் வைரமுத்து 1008 ஆடுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    சந்திக்க

    சந்திக்க

    அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மின் ஊழியர்கள் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதித்த மாவட்டங்களை பிரதமர் நேரில் பார்வையிட்டு மக்களை சந்தித்து இருக்க வேண்டும்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    அப்போதுதான் நமக்கு கூடுதல் நிதி விரைவாக கிடைத்திருக்கும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிறப்பு பேரிடர் பாதித்த மாவட்டங்கள் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    கண்காணிக்க வேண்டும்

    கண்காணிக்க வேண்டும்

    கர்நாடகாவில் அணை கட்டுவது இரண்டு மாநில பிரச்சினை அல்ல. இது இந்திய பிரச்சினையாக கருத வேண்டும். இந்த பிரச்சினையை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கூடுதல் கண்காணிப்பு

    கூடுதல் கண்காணிப்பு

    புயலால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய விவசாயிகளுக்கு தற்போது இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. இந்த அணை பிரச்சினையை மத்திய அரசு கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    English summary
    Vairamuthu condemns for Mekedatu dam issue. He also gives 1008 goats for the people in Gaja affected areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X