தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

தஞ்சை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தேமுதிக தொண்டர் வீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள விஜயபிரபாகரன் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.

அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!

பிரேமலதா

பிரேமலதா

விஜயகாந்தின் மகனாகவே வந்துள்ளேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பொருளாளர் பிரேமலதாவே கூறிவிட்டார். அதன்படி இந்த கூட்டணி தொடரும்.

தோல்வி

தோல்வி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்கு சென்றிருப்பதை நல்ல விஷயமாக பார்க்க வேண்டும். சந்திரயான் 2 விண்கலம் தோல்வி அல்ல. இது வெற்றிதான். அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏராளமான முறை விண்கலத்தை ஏவி அதில் தொடர் தோல்வி அடைந்து பின்னர் வெற்றி பெற்றன.

பாராட்டு

பாராட்டு

ஆனால் நாமோ முதல் முயற்சியிலேயே 95 சதவீதம் வெற்றியை பெற்றுவிட்டோம். இதுதான் முதல்படி. இதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல ஆரோக்கியம்

நல்ல ஆரோக்கியம்

தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார் என்றார் விஜய பிரபாகரன்.

English summary
Vijaya Prabhakaran in Tanjore says that Vijayakant is very fine and he will participate in Tiruppur DMDK conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X