தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எப்போது விடுதலை செய்வீர்கள்... இயக்குநர் அமீர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    7 பேரை எப்போது விடுதலை செய்வீர்கள் - இயக்குனர் அமீர் கேள்வி- வீடியோ

    கும்பகோணம்: மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளுநருக்கு 7 பேரை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தும்.

    When will you release 7 people including Perarivaalan Director Ameer question
    இன்னும் விடுதலை குறித்த எந்த பதிலும் இல்லை.

    இதற்கிடையே, பேரறிவாளனை அவ்வப்போது சந்தித்து இயக்குநர் அமீர் ஆறுதல் தெரிவித்து வருவதுடன், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்தநிலையில், கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். பின்னர்
    செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசுக்கு என தனியாக அதிகாரம் இருந்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்றார்.

    மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் என்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

    English summary
    Dirctor Ameer said that if state goverment get special power, Rajiv Gandhi assasination case convicts released on early
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X