தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் நாள் அணு ஏவுகணை சோதனை.. மறுநாளே சுகோய் 30.. தென்னிந்தியாவில் பாதுகாப்பை அதிகரிக்கும் அரசு!

அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட கே-4 ஏவுகணையை இந்தியா நேற்றுதான் சோதித்த நிலையில் இன்று தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய் 30 எம்கேஐ விமானம் சேர்க்கப்பட்டுள்ளது .

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்

    தஞ்சாவூர்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட கே-4 ஏவுகணையை இந்தியா நேற்றுதான் சோதித்த நிலையில் இன்று தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய் 30 எம்கேஐ விமானம் சேர்க்கப்பட்டுள்ளது

    கடந்த சில மாதங்களாக இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எல்லை, சீனா எல்லை என்று எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய பாதுகாப்பில் இது மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஒரு அங்கமாக, தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி! டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி!

    நேற்று என்ன

    நேற்று என்ன

    நேற்றுதான் ஆந்திராவில் கடல் பகுதியில் அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அணு ஆயுதம் இல்லாமல், இந்த ஏவுகணை மட்டும் சோதனை செய்யப்பட்டு, கடற்பரப்பில் வைத்து கே-4 ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. கடலுக்கு உள்ளே இருந்து வெளியே சென்று தாக்குதல் நடத்தும் சக்தி படைத்தது இது.

    தூரம்

    தூரம்

    மொத்தம் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது. மிக முக்கியமாக குறிக்கப்பட்ட இடத்தை மிக துல்லியமாக தாக்கும், அதிகபட்சம் 40மீ வரை மட்டுமே இதில் தவறு நேர கூடும். உலகிலேயே இவ்வளவு துல்லியமாக தாக்கும் அணு ஏவுகணைகள் சிலதான் இருக்கிறது. அந்த அளவிற்கு வல்லமை கொண்டது கே-4 ஏவுகணை.

    தாக்கியது

    தாக்கியது

    இந்த கே-4 ஏவுகணை சோதனையின் போது மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது. இதை முழுக்க முழுக்க மத்திய அரசின் டிஆர்டிஓதான் உருவாக்கியது. இதை இந்தியாவின் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பலான அரிஹந்த்தில் சேர்க்க உள்ளனர். அரிஹந்த் நீர் மூழ்கி கப்பல் தென்னிந்தியாவில்தான் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    எவ்வளவு இடம்

    எவ்வளவு இடம்

    சுமார் 750 கிமீ தூரத்தை தினமும் அரிஹந்த் ரோந்து மேற்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதத்தில் அரிஹந்த் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் தென்னிந்தியா மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் சோதனை செய்யப்பட்ட கே-4 இன்னும் சில நாட்களில் அரிஹந்த்தில் சேர்க்கப்படும்.

    நிறைய கேள்வி

    நிறைய கேள்வி

    நேற்று இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வல்லமை கொண்ட சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புப்படை திடீர் என்று தென்னிந்தியா மீது குறிப்பாக இந்திய பெருங்கடல் மீது கவனம் செலுத்த தொடங்கியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    English summary
    Air Force did a Nuclear capable missile test Yesterday and today inducted Sukhoi-30MKI in Tanjore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X