தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்

Google Oneindia Tamil News

தஞ்சை: சவுதி அரேபியாவில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வந்து தஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது பம்பப்படையூர் தென்னூர். இங்குள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் 36 வயது இளைஞர் ராஜ்குமார் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு சொந்த ஊர் திரும்பினார். சளி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

Youth escapes from Corona Ward at thanjavur govt Hospital

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

.ஆனால் கொரோனா அறிகுறியுடன் இருந்த ராஜ்குமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஓடி விட்டார். ரத்த மாதிரி எடுப்பதற்கு முன் அவர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. எனவே ராஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் என்ஜினியர் குணமாகிவிட்டார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர், அயர்லாந்தில் இருந்து வந்த மாணவர், தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பேர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Coronavirus out break : Youth escapes from Corona Ward at thanjavur govt Hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X