• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

22 வயது செல்வி.. நினைச்சபோதெல்லாம் உல்லாசம்.. கடைசியில்.. துண்டு துண்டாக வெட்டி.. தேனி ஷாக்!

|

தேனி: கறிக்கடைக்காரர் 22 வயது செல்வியை ஏமாற்றி விட்டார்.. நகையும் திருப்பி தரவில்லை, கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.. இதனால், துண்டு துண்டாக செல்வியை வெட்டி குளத்தில் போட்டுவிட்டார்... இந்த சம்பவம்தான் தேனியை உலுக்கி எடுத்து வருகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதுபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி.. இவரது மனைவி கலைச்செல்வி.. 22 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 2 வருடமாகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 9.9.2020 கருப்பசாமி திடீரென உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை என்று புகார் தந்தார். இதனால் போலீசாரும் அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.

லிஸ்ட்

லிஸ்ட்

இதனால், கலைச்செல்வியின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர்.. அவர் யார் யாருடன் பேசினார், குறிப்பாக கடைசியாக யாருடன் பேசினார் என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லிஸ்ட் எடுத்தனர். அப்போது, சிலம்பரச கண்ணன் என்பவர் பெயர் அடிபட்டது.. இவருடன்தான் நிறைய முறை கலைச்செல்வி பேசியிருப்பதும் தெரியவந்தது. சின்னமனூரை சேர்ந்த சிலம்பரச கண்ணனுடன் கலைச்செல்விக்கு தவறான உறவு இருந்துள்ளதும் தெரியவந்தது.

உண்மை

உண்மை

இதையடுத்து, சிலம்பரச கண்ணனை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போதுதான் மொத்த உண்மையும் தெரியவந்தது.. சிலம்பரச கண்ணன் கறிக்கடை வைத்திருக்கிறார்.. இவரும் செல்வியும் கல்யாணத்துக்கு முன்பே காதலித்து வந்தார்களாம். செல்விக்கு திருமணமாகியும் உறவு தொடர்ந்து வந்துள்ளது.

 ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை

சிலம்பரச கண்ணனுக்கும் கல்யாணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்.. செல்வியிடம் 50 சவரன் நகையை சிலம்பரசகண்ணன் ஏமாற்றி உள்ளதும், இதுபோக அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பணம், நகையை பற்றி கலைச்செல்வி கேட்டபோதெல்லாம், அதை தர மறுத்து தகராறும் செய்திருக்கிறார் சிலம்பரச கண்ணன். நகைகளை விற்று கிடைத்த பணத்தின் மூலம் சிலம்பரச கண்ணன் கார், 2 ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்

பிடிவாதம்

பிடிவாதம்

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி, ஒன்று தன்னுடைய நகை தரவேண்டும், இல்லாவிட்டால் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.. செல்வியின் இந்த டார்ச்சர் இப்படியே தொடர்ந்ததால், அவரை கொல்லவும் முடிவு செய்துள்ளார்.. அதனால் சம்பவத்தன்று, தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.. செல்வியும் கைக்குழந்தையுடன் அங்கு சென்றுள்ளார்..

 கறிக்கடை

கறிக்கடை

அப்போதுதான் ஈவிரக்கமில்லாமல், ஒருவருட பிஞ்சுவை கழுத்தை நெறித்தே கொன்றுள்ளார். இதற்கு பிறகு செல்வியை கொலை செய்ய, கறிக்கடையில் வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவரை உதவிக்கு வரவழைத்துள்ளார்.. ராஜேஷூக்கு 18 வயதாகிறது.. ஆளுக்கு ஒரு கறி வெட்டும் கத்தியை எடுத்து கொண்டு, கலைச்செல்வியை கொன்றுள்ளனர்.. 2 பேரின் சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டி, ஒரு சாக்குபையில் போட்டு கொண்டு, கருங்காட்டான் குளத்தில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது..

 எலும்புக்கூடு

எலும்புக்கூடு

இறுதியில் அந்த குளத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.. ஆனால், அதில் உடல் பாகங்கள் எல்லாமே எலும்புகளாக உருமாறி போய் இருந்தது.. அவை போஸ்ட் மார்ட்டத்துக்கு தேனி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.... ஒரு வருடம் கழித்து கொலை விவகாரம் வெளியே வந்துள்ளதால், தேனி பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது. கறிக்கடைக்காரர் சிலம்பரச கண்ணன், கொலை உதவியாளர் ராஜேஷ் 2 பேரும் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

English summary
22 year old woman and one year old baby brutally killed near Theni
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X