தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செமையாக பார்ம் ஆகும் தேனி அதிமுக.. 5000 அமமுகவினர் கொத்தோடு அதிமுகவுக்கு ஜம்ப்.. ஓபிஎஸ் அசத்தல்!

தேனி மாவட்டத்தில் 5000 அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    5000 அமமுகவினர் கொத்தொடு அதிமுகவில் இணைந்தனர்- வீடியோ

    தேனி: செமயாக ஃபார்ம் ஆகி வருகிறது தேனி மாவட்ட அதிமுக.. முக்கிய புள்ளிகள் உட்பட 5500க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளனர்.
    ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் என்ற இந்த இரு புள்ளிகளின் தலைமையில்தான் தேனி மாவட்டமே பிரிந்து இயங்கியது.

    இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள்.. இருவருமே ஜெயலலிதாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர்கள். அதனால்தான் ஜெயலலிதா மறைந்தும், நீயா, நானா என்ற ரீதியில் இந்த தொகுதி இவர்களின் கீழ் செயல்பட்டு வந்தது.

     தொடர் தோல்வி

    தொடர் தோல்வி

    ஆனால் அமமுகவின் தொடர் தோல்வியால் தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம் தாவினார். தேனியில் திமுகவின் செல்வாக்கு இனி வலுவாகும் என்று ஸ்டாலினும் கணக்கு போட்டார். தன்னுடைய ஆதரவாளர்களை மொத்தமாக தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம் அள்ளி கொண்டு வருவார் என்றும் கணக்கு போட்டுள்ளார். அது செயல்பாட்டிலும் உள்ளதாக தெரிகிறது.

     செல்வாக்கு

    செல்வாக்கு

    இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், ஏற்கனவே உயர்ந்திருந்த ஓபிஎஸ்-ன் செல்வாக்கு, மகன் எம்பியான பிறகு இன்னும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். கட்சிக்குள் போட்டியாக இருந்தவர், எதிர்தரப்பில் சென்றுவிட்டதால், தேனி அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸின் கையே ஓங்கி வருகிறது.

     ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அமமுக கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ ராமராஜ், கடமலை-மயிலை தர்மராஜ், கூடலூர் அருண்குமார், கம்பம் ஞானசேகர், ஆண்டிபட்டி பொன்முருகன், தேனி ஒன்றியம் பெரியசாமி, பெரியகுளம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி ஓபிஎஸ் முன்னிலையில் தாய் கழகத்தில் இப்போது இணைந்துள்ளனர்.

     பொது எதிரி

    பொது எதிரி

    இந்த இணைப்பு விழாவில் பேசிய ஓபிஎஸ், "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நாம் அனைவரும் அண்ணன்-தம்பிகள்தான். வேற எந்த பாகுபடுகளும் நமக்குள் இல்லை. எல்லாருமே இயக்கத்தின் ரத்தம். வத்தலக்குண்டு ஆறுமுகம் போன்று தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் இது. மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று புரட்சித் தலைவி அம்மா சொன்னது போல் மக்களுக்காக பணியாற்றும் அர்ப்பணிப்பு கொண்ட இயக்கம் நமது கழகம். நமக்கு பொதுவான எதிரி திமுக மட்டுமே" என்று கூறினார்.

     தங்க தமிழ்செல்வன்

    தங்க தமிழ்செல்வன்

    சமீப காலமாகவே அமமுகவில் இருப்பவர்கள்,மெல்ல மெல்ல விலகி வருகின்றனர். அதன்படி, தேனி தொகுதியிலும் அதிருப்தியில் உள்ள அமமுகவினர் வேறு கட்சிக்கு தாவாமல், தாய்க்கழகத்திலேயே இணைந்துள்ளது, அதிமுகவுக்கு பலத்தை தருவதுடன், ஓபிஎஸ்-ன் மதிப்பையும் தொகுதிக்குள் உயர்த்தி வருகிறது. என்றாலும், தங்க தமிழ்செல்வனும் ஏதாவது ஒரு வகையில் தன் பலத்தை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.

    English summary
    Theni District AMMK 5500 Members has joined in AIADMK in front of Dy Chief Minister O Panneerselvam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X