தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடல் நலம் பாதித்த மகளை பார்க்க முதுமையை பொருட்படுத்தாமல் நடந்த மூதாட்டி- அரவணைத்த கரங்கள்

Google Oneindia Tamil News

தேனி: உடல்நலம் பாதித்த மகளை பார்க்க முதுமையையும் பொருட்படுத்தாமல் துணிவுடனும் நெஞ்சில் பாசத்துடனும் நடைபயணம் மேற்கொண்ட தேனி மூதாட்டி மூக்கம்மாள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அவரை தன்னார்வ இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டு மகளிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள். முதியவரான இந்த மூக்கம்மாளின் மகள் தேவாரத்தில் வசித்து வருகிறார்.

A story about Another side of Coronavirus Lockdown

மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக மூக்கம்மாள் பாட்டிக்கு தகவலுக்கு வந்தது. பெற்ற மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்க்க துடித்தார் பாட்டி மூக்கம்மாள்.

ஆனால் எந்த பொது போக்குவரத்தும் இல்லாத சூழ்நிலையில் பெரியகுளத்தில் இருந்து தேவாரத்துக்கு நடந்தே செல்வது என முடிவெடுத்தார் மூக்கம்மாள் பாட்டி. முதுமையை பொருட்படுத்தாமல் போடி பகுதி சென்றுவிட்டார் மூக்கம்மாள் பாட்டி.

கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம் கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம்

அப்பகுதியில் பரிதவித்து வந்த மூக்கம்மாள் பாட்டிக்கு சூல் இயற்கை அமைப்பினர் உதவிக் கரம் நீட்டினர். மூக்கம்மாள் பாட்டி தொடர்பாக போலீசாரிடம் பேசி அனுமதி பெற்று அவரின் மகளை பார்க்க தேவாரதிற்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

A story about Another side of Coronavirus Lockdown

மூக்கம்மாள்பாட்டியுடன் சூல் இயற்கை அமைப்பை சார்ந்த செல்லபண்டி, ஆனந்தராஜ் மற்றும் ராஜா சாலிவாகணம் ஆகியோர் தேவாரத்துக்கு சென்றனர். அங்கு மகளிடம் மூக்கம்மாள் பாட்டி பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

English summary
Here is a story about another side of Coronavirus Lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X